என் மலர்

  செய்திகள்

  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
  X
  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

  இன்று பக்ரீத் பண்டிகை - கவர்னர் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  நாடு முழுவதும் இன்று(திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

  தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  இறைவன் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற தியாகம் செய்ய தயாராக இருந்த நிகழ்வை குறிக்கும் நாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

  சர்வ வல்லமை உள்ள இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப, ஒருவர் தனது எண்ணங்களையும், செயல்களையும் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த விழா கொண்டாடப்படுகிறது.

  இத்தகைய பெருமைமிகு இந்த திருநாளில் தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மை, இரக்கம் ஆகியவற்றின் மூலம் தெய்வீக நற்பண்புகளை நிலைநிறுத்த உறுதி ஏற்போம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×