search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்வாரிலால் புரோகித்"

    • தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார்.
    • குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

    பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார்.

    நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்த நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    • தமிழக ஆளுநராக பதவி வகித்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது
    • பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது.

    சண்டிகர்:

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், தற்போது பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் லூதியானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் முற்றியுள்ளது.

    இது குறித்து பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் 4 ஆண்டுகள் தமிழக ஆளுநராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்தது. தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி, 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. அதனால் பஞ்சாப் அரசு என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

    பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. துணைவேந்தர் பதவி நீட்டிப்புக்கு அரசு மூன்று முறை எனக்கு கடிதம் அனுப்பியது. துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு பங்கு இல்லை என்றால், பதவி நீட்டிப்பு வழங்குவதில் மட்டும் அவருக்கு எப்படி பங்கு இருக்க முடியும்?  மூன்று முறை தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்க ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் முழுநேர துணை வேந்தர் நியமனத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெறப்படவில்லை.

    பஞ்சாப் மாநிலத்தின் வேளாண் பல்கலைக்கழக வேந்தர் ஆளுநர் தான். தலைமைச் செயலாளர் அல்ல. இந்த விவகாரத்தில் நான் சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பேன். அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன். அந்தப் பணியை செய்வதில் இருந்து என்னை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விவாகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #EdappadiPalaniswami #BanwarilalPurohith
    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். கனமழை எச்சரிக்கை, அரசியல் சூழல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையில், அது தொடர்பாகவும், கருணாஸ் விவகாரம் பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளார். #BanwarilalPurohith #RajivCaseConvicts
    சென்னை:

    ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று அளித்த தேநீர் விருந்தை ஐகோர்ட் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் புறக்கணித்துள்ளனர். #IndependenceDay #RajBhavan #BanwarilalPurohit #Judges
    சென்னை:

    சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி மாநில கவர்னர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில், மாநில முதல்வர்கள், ஐகோர்ட் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், சட்டசபை சபாநாயகர் மற்றும் அரசு உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் இன்று அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    விருந்து முடிந்ததும் ராஜ்பவனில் உள்ள தோட்டத்தில் கவர்னர், முதல்வர், தலைமை நீதிபதி ஆகியோர் ரோஜா செடி நட்டு வைத்தனர். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ளது போல ரோஜா தோட்டம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஐகோர்ட் தலைமை நீதிபதி தவிர மற்ற நீதிபதிகள் யாரும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வில்லை. சில நாட்களுக்கு முன்னர் ராஜ்பவனில் நடந்த தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவியேற்கும் விழாவில், நீதிபதிகள் பின் வரிசையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சில நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். 
    சென்னை ராஜ்பவன் பணியாளர்களுக்காக காலை முதல் இரவு வரை இயங்கும் முழுநேர மலிவுவிலை உனவகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திறந்து வைத்தார். #RajBhavan #BanwarilalProhit
    சென்னை:

    தமிழக கவர்னர் மாளிகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பயன்படும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இயங்கும் மலிவு விலை உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திறந்து வைத்தார்.

    மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக தயாரிக்கப்படும் உணவு வகைகள் லாப நோக்கம் இல்லாமல், குறைந்த விலையில் ஊழியர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×