என் மலர்

  செய்திகள்

  பண மோசடி
  X
  பண மோசடி

  வீடு கட்டித் தருவதாக போலி ஆவணம் தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே வீடு கட்டித்தருவதாக போலி ஆவணம் தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  மதுரை:

  மதுரை ஒத்தக்கடை காந்தி நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 46). இவர் சிட்டாம்பட்டி ஹரிகரன் நகரில் நிலம் வாங்கி வீடு கட்ட விரும்பினார்.

  அப்போது கே.புதூரைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சின்னத்துரை (44) என்பவர் “நான் உங்களுக்கு வீடு கட்டித்தருகிறேன். ஆனால் நீங்கள் முதலில் நிலம் வாங்க வேண்டும் என்று ஹரிஹரன் நகரைச் சேர்ந்த மெய்யப்பனை அறிமுகப்படுத்தி உள்ளார்.

  இதையடுத்து மெய்யப்பனிடம் ரூ.3 லட்சம் மதிப்பில் நிலம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது ரூ.64 ஆயிரத்தை முன் பணமாக கொடுத்த முருகன், மீதமுள்ள தொகையை மதுரை டவுன்ஹால் ரோடு அரசு வங்கியில் கடன் பெற்று செலுத்தி உள்ளார்.

  அதன் பிறகு முருகன்- சின்னத்துரை இடையே வீடு கட்டுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையே சின்னத்துரை போலி ஆவணங்களை தயார் செய்து நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். எனவே இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை.

  இந்த நிலையில் முருகன் கடன் வாங்கிய அரசு வங்கி ‘வீடு கட்டுமானத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை’ என்ற குற்றச்சாட்டின் பேரில் பொதுநல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  இது தொடர்பாக முருகன் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×