search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்மறி ஆடு
    X
    செம்மறி ஆடு

    பக்ரீத் பண்டிகை - அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனையான செம்மறி ஆடுகள்

    பக்ரீத் பண்டிகையை யொட்டி அய்யலூர் சந்தையில் செம்மறி ஆடுகள் ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையானது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களான மோர்ப்பட்டி தீத்தா கிழவனூர், தென்னம்பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் ஆடு, கோழி, காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    திருச்சி, புதுக்கோட்டை, நத்தம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இதனை வாங்கிச் செல்கின்றனர். பக்ரீத் பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இதனால் கடந்த சில வாரங்களாகவே அய்யலூர் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. விலை அதிகரித்த போதும் அதிக அளவில் ஆடுகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இன்று நடந்த சந்தையிலும் அதிக அளவு செம்மறி ஆடுகள் விற்பனையானது.

    20 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடு ரூ.27 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. இருந்த போதும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கியதால் சந்தை வேகமாக முடிந்தது.

    நாட்டுக் கோழி ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனையானது. சேவல் ரூ.1,500 முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. அய்யலூர், வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார மலை கிராமங்களில் சேவல் சண்டை அதிகரித்துள்ளது. இதற்கு தடை விதித்த போதும் மறை முகமாக நடத்தி வருகின்றனர். அய்யலூர் சந்தையில் சேவல்களை சண்டையிட விட்டு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    Next Story
    ×