என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  களக்காட்டில் போலீசாருக்கு கொலை மிரட்டல் - தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களக்காட்டில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  களக்காடு:

  களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக களக்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒருவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

  இதையடுத்து அவரை போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் வள்ளியூர் அருகே உள்ள விஸ்வாசபுரத்தை சேர்ந்த தொழிலாளியான அர்ச்சுணன் மகன் சுதர்சன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். எனினும் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களையும், ரூ. 200 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×