search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சதுரகிரிமலைக்குச்‌ செல்லும்‌ பக்தர்கள்‌
    X
    சதுரகிரிமலைக்குச்‌ செல்லும்‌ பக்தர்கள்‌

    சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் வனப்பகுதிக்குள் குப்பைகளை வீச வேண்டாம் - வனத்துறையினர்

    சதுரகிரிமலைக்குச்‌ செல்லும்‌ பக்தர்கள்‌ வனப்பகுதிக்குள்‌ குப்பைகளை வீச வேண்டாம்‌ என வனத்துறை வேண்டுகோள்‌ விடுத்துள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஆடி அமாவாசை திருவிழாவுக்காக் சதுரகிரி மலைக்குச்‌ செல்ல பக்தர்‌களுக்கு வனத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதையடுத்து, நேற்று முன்தினம் முதல் சதுரகிரி மலைக்கு பக்தர்கள்‌ சென்றுவரத்‌ தொடங்கி உள்ளனர்‌. இந்த திருவிழாவுக்காக உள்ளூர்‌, வெளியூர்‌ மற்றும்‌ வெளி மாவட்டங்களில்‌ இருந்தும்‌, வெளி மாநிலங்களில்‌ இருந்தும்‌ லட்சக்கணக்கான பக்தர்கள்‌ வருவார்கள்‌ என்பதால்‌ பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ பலப்படுத்தப்‌பட்டு உள்ளன.

    சதுரகிரி மலையின்‌ மேல்‌ அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம்‌, சந்தன மகாலிங்கம்‌ கோவில்களில்‌ மதுரை மாவட்ட போலீசாரும்‌, அடிவாரப்‌ பகுதியான வண்டிப்‌ பண்ணை, தாணிப் பாறை மலைப்‌பாதையில்‌ உள்ள மாங்கனி ஓடை, வழுக்குப்‌ பாறை, சங்கிலிப்‌ பாறை, பசுக்கடை, நாவலூத்து, கோரக்கர் குகை, பிலாவடி கருப்பசாமி கோவில் ஆகிய பகுதியில் விருதுநகர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை, தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பக்தர்களுக்காக மலைப்பாதையில் 5 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சதுரகிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் வனப்பகுதியில் குப்பைகளை போட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    ரொட்டி பாக்கெட், சிகரெட் பாக்கெட், தண்ணீர் பாட்டில்கள், உணவு எச்சங்களை வனப்பகுதியிகளில் போட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    சதுரகிரி மலைப்பகுதியில் தான் தாணிப்பாறை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, பசுக்கிடை, சின்ன பசுக்கிடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட 10 இடங்களில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை போடும் வகையில் பெரிய குப்பைத் தொட்டிகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ளன. அதில் குப்பைகளை போடுமாறு பக்தர்களுக்கு விருதுநகர் மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.

    விடுமுறை தினமான நேற்று சதுரகிரியில் 13 ஆயிரம் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×