என் மலர்

  செய்திகள்

  அனந்தபுரி விரைவு ரெயில்
  X
  அனந்தபுரி விரைவு ரெயில்

  அனந்தபுரி ரெயிலின் அடியில் சிக்கிய பெண் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு - மதுரையில் பரபரப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் அனந்தபுரி விரைவு ரெயிலின் அடியில் சிக்கிய பெண் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
  மதுரை:

  கேரளாவின் கொல்லம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரெயில் இன்று காலை மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

  அந்த ரெயிலில் பயணம் செய்த பூர்ணிமா என்ற பெண் தூக்க கலக்கத்தில் நடந்து சென்று ரெயில் பெட்டியில் இருந்து நடைமேடையில் இறங்கியுள்ளார். அப்போது அவர் தவறி விழுந்து ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டார். 

  தகவலறிந்து ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் அவரை மீட்க முயன்றனர். தொடர்ந்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  இதன்பின் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து அந்த வழியே செல்ல வேண்டிய மற்ற ரெயில்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன. ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அந்த ரெயில்களில் இருந்த பயணிகள் சரியான நேரத்தில் தங்களது ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

  ரெயிலுக்கு அடியில் சிக்கிய பெண் மீட்கப்பட்டது மதுரை ரெயில் நிலையத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×