search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மீட்பு"

    • அர்ஜூன், பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் மீட்டனர்.
    • கைதான 2 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை:

    மடிப்பாக்கம் சீனிவாச நகர் சம்மந்தர் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் விபசாரம் நடப்பதாக சிந்தாதரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்தில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண்களை விபசாரத்தில் ஈடுபட வைத்த 4 பேரில் 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசில் சிக்கிய அர்ஜூன், பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் மீட்டனர். கைதான 2 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்ணை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    • சாய் சுப்ரியாவின் பெற்றோர் மகளை பார்ப்பதற்காக வந்தனர். ஆனால் மது பாபு மகளை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பினார்.
    • போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பட்டீலிடம் சாய் சுப்ரியா பெற்றோர் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயநகரம், ஒகடோ பகுதியை சேர்ந்தவர் மது பாபு. இவர் வக்கீலாக வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் புட்டபர்த்தி சத்திய சாயி மாவட்டம் ஜனார்த்தன், ஹேமலதா தம்பதியின் மகள் சாய் சுப்ரியா என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2009-ம் ஆண்டு சாய் சுப்ரியாவுக்கு மகள் பிறந்தார்.

    சாய் சுப்ரியாவின் பெற்றோர் மகளை பார்ப்பதற்காக வந்தனர். ஆனால் மது பாபு மகளை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பினார்.

    சாய் சுப்ரியாவுக்கு மகள் பிறந்த பிறகு அவரது பெற்றோர் வீட்டில் பழகவும் பேசவும் கூடாது என அவரது மாமியார், கணவர் ஆகியோர் தடை விதித்தனர். மேலும் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்தனர்.

    மேலும் சாய் சுப்ரியாவுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. கடந்த 14 ஆண்டுகளாக சாய் சுப்ரியா தனது பெற்றோரை பார்க்காமலும் பேசாமலும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இதனால் அவரது பெற்றோர் தனது மகளை பார்க்க முடியாமல் தவித்து வந்த நிலையில் கடந்த மாதம் மகளை பார்ப்பதற்காக மீண்டும் அவரது வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்களை வீட்டில் சேர்க்காமல் துரத்தி அடித்தனர்.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பட்டீலிடம் அவரது பெற்றோர் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் போலீசார் மது பாபு வீட்டிற்கு சென்று சாய் சுப்ரியாவை அவரது பெற்றோர் பார்க்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் சர்ச் வாரண்ட் உள்ளதா எனக்கேட்டு திருப்பி அனுப்பினர்.

    இதையடுத்து சாய் சுப்ரியாவை மீட்பதற்காக போலீசார் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ரம்யா சாய் சுப்ரியாவை மீட்க உத்தரவு பிறப்பித்தார்.

    கோர்ட்டு உத்தரவின் பேரில் மகளிர் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மது பாபு வீட்டிற்கு சென்று பலமுறை கதவை தட்டினர்.

    திறக்காததால் கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று சாய் சுப்ரியாவை மீட்டனர். பின்னர் சாய் சுப்ரியாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவருடைய பெற்றோருடன் செல்ல நீதிபதி ரம்யா உத்தரவு பிறப்பித்தார்.

    • 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார்
    • இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார், பின்னர் அங்கு தனக்கு உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் கொடுமை படுத்தி வருவதாகவும் தன்னை தமிழகம் மீட்க உதவுமாறு தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், சுற்றுலாத்துறை அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இததையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் தனது முயற்சியால் இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொண்டு சிவகாமியை மீட்டார்.

    இதனையடுத்து சிவகாமி விமானம் மூலம் தமிழ்நாடு வந்தடைந்தார். பின்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.

    • மோகனூர் ரோட்டில் கொண்டி செட்டிபட்டி ஏரி உள்ளது .
    • இந்த ஏரியில் இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை அந்த பகுதியினர் பார்த்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே மோகனூர் ரோட்டில் கொண்டி செட்டிபட்டி ஏரி உள்ளது . இந்த ஏரியில் இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை அந்த பகுதியினர் பார்த்தனர் . இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் உடனே அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எந்த விவரமும் தெரியவில்லை.

    இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர் தவறி விழுந்தாரா? அல்லது யாராவது அடித்து போட்டார்களா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விழுப்புரம் ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்
    • பொதுமக்களை அடிப்பதாக புகார்

    வந்தவாசி:

    வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி வருவதாகவும் அப்பெண் பொதுமக்களை தகாத வார்த்தைகள் பேசியும், அடிக்கவும் செய்துள்ளார் என அப்பகுதி பொதுமக்கள் மூலம் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    பிறகு போலீசார் உடனே மீட்பு பணிகள் செய்து வரும் அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலறிந்து நேரடியாக சென்று பார்வையிட்ட‌ அறக்கட்டளையின் நிறுவனர் அசாருதீன் மற்றும் கேஷவராஜ் பெண்ணின் அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் அருகில் உள்ள ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்.

    • அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியாததால் முன்னுக்குப் பின் முரணாக இந்தியில் பதிலளித்து கொண்டிருந்தார்.
    • அரசு அதிகாரிகளை வரவழைத்து பெண்ணை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி பழைய பஸ் நிலையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாலையோரம் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக பொதுமக்கள் மூலம் பசியில்லா தமிழகம் எனும் தொண்டு அமைப்பிற்கு தகவல் வந்தது.

    உடனே அவர்கள் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியாததால் முன்னுக்குப் பின் முரணாக இந்தியில் பதிலளித்து கொண்டிருந்தார்.

    உடனடியாக பசியில்லா தமிழகம் குழுவினர் தென்காசி பெண்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு தொடர்பு கொண்டு உரிய அரசு அதிகாரிகளை வரவழைத்து காவல்துறை உதவியுடன் அந்தப் பெண்ணை மீட்டு தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அனுமதி பெற்று, தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரகாஷ் உத்தரவின் பேரில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பெண் காவலர்கள் மூலம் பசியில்லா தமிழகம் அந்த பெண்ணிற்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லம் காப்பகத்தில் தற்போது அனுமதித்தனர்.மேலும் அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை கொடுத்து இல்லம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    விரைவில் அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்து அவரது குடும்பத்தை கண்டுபிடித்து குடும்பத்துடன் ஒப்படைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பசியில்லா தமிழகம் அமைப்பினர் கூறினர்.

    ஆதரவின்றி சுற்றித் திரிந்த பெண்ணை மீட்டு உடனடியாக அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அந்தப் பெண் காப்பாற்றப்பட்டது அறிந்து அந்தப் பகுதி மக்கள் பசியில்லா தமிழகம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் வெகுவாக பாராட்டினர்.

    முடிவில் பசியில்லா தமிழகம் அமைப்பின் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி கூறினார்.

    • ஆந்திராவில் உள்ள சமூக சேவகர்கள் மூலம் ராமலெட்சுமியின் குடும்பத்தினரை தேடி கண்டு பிடித்துள்ளார்கள்.
    • ராமலெட்சுமி மீட்கப்பட்டு நலமுடன் இருக்கும் தகவல் கேட்டதும் கணவர், குழந்தைகள் உள்பட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜனவரி 10-ந்தேதி மனநலம் பாதித்த நிலையில் அம்பத்தூர் தெருவில் அலைந்துகொண்டிருந்த ஒரு பெண் பற்றி உதவும் கரங்கள் அமைப்புக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

    உடனே அங்கிருந்து சமூக சேவகர்கள் சென்று அந்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு மன நல சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் சுய நிலைக்கு திரும்பிய அந்த பெண் தன்னை பற்றியும், தனது ஊரை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுபடுத்தி தகவல்கள் தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மயிலாவரம் பகுதியில் பெட்டா கேமரலா கிராமத்தை சேர்ந்தவர். அவரது பெயர் ராமலெட்சுமி (31). கணவர் பெயர் பக்துலா ஸ்ரீனு என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆந்திராவில் உள்ள சமூக சேவகர்கள் மூலம் ராமலெட்சுமியின் குடும்பத்தினரை தேடி கண்டு பிடித்துள்ளார்கள்.

    ராமலெட்சுமிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு மன நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் விட்டதாகவும் தெரிவித்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் விட்டு விட்டனர்.

    இந்த நிலையில் ராமலெட்சுமி மீட்கப்பட்டு நலமுடன் இருக்கும் தகவல் கேட்டதும் கணவர், குழந்தைகள் உள்பட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கணவருடன் சேர்ந்த மகிழ்ச்சியில் ராமலெட்சுமி ஆனந்த கண்ணீர் வடித்தார். குடும்பத்தினரும் அவரை கட்டித்தழுவி வரவேற்றனர்.

    ×