search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த வடமாநில பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்த தொண்டு அமைப்பினர்
    X

    மீட்கப்பட்ட பெண்ணுடன் தொண்டு அமைப்பினர் மற்றும் போலீசார்.

    தென்காசியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த வடமாநில பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்த தொண்டு அமைப்பினர்

    • அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியாததால் முன்னுக்குப் பின் முரணாக இந்தியில் பதிலளித்து கொண்டிருந்தார்.
    • அரசு அதிகாரிகளை வரவழைத்து பெண்ணை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி பழைய பஸ் நிலையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாலையோரம் ஆதரவின்றி சுற்றித் திரிவதாக பொதுமக்கள் மூலம் பசியில்லா தமிழகம் எனும் தொண்டு அமைப்பிற்கு தகவல் வந்தது.

    உடனே அவர்கள் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணிற்கு தமிழ் தெரியாததால் முன்னுக்குப் பின் முரணாக இந்தியில் பதிலளித்து கொண்டிருந்தார்.

    உடனடியாக பசியில்லா தமிழகம் குழுவினர் தென்காசி பெண்கள் பாதுகாப்பு அமைப்பிற்கு தொடர்பு கொண்டு உரிய அரசு அதிகாரிகளை வரவழைத்து காவல்துறை உதவியுடன் அந்தப் பெண்ணை மீட்டு தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அனுமதி பெற்று, தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரகாஷ் உத்தரவின் பேரில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், பெண் காவலர்கள் மூலம் பசியில்லா தமிழகம் அந்த பெண்ணிற்கு முதலுதவி செய்யப்பட்டது. பின்னர் தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் அன்பு இல்லம் காப்பகத்தில் தற்போது அனுமதித்தனர்.மேலும் அவருக்கு மேற்கொண்டு சிகிச்சை கொடுத்து இல்லம் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    விரைவில் அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளித்து அவரது குடும்பத்தை கண்டுபிடித்து குடும்பத்துடன் ஒப்படைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக பசியில்லா தமிழகம் அமைப்பினர் கூறினர்.

    ஆதரவின்றி சுற்றித் திரிந்த பெண்ணை மீட்டு உடனடியாக அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அந்தப் பெண் காப்பாற்றப்பட்டது அறிந்து அந்தப் பகுதி மக்கள் பசியில்லா தமிழகம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் வெகுவாக பாராட்டினர்.

    முடிவில் பசியில்லா தமிழகம் அமைப்பின் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா அனைத்து துறை அதிகாரிகளுக்கும் நன்றி கூறினார்.

    Next Story
    ×