மடிப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்- 2 பேர் கைது

அர்ஜூன், பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் மீட்டனர். கைதான 2 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மடிப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்- 2 பேர் கைது
Published on

சென்னை:

மடிப்பாக்கம் சீனிவாச நகர் சம்மந்தர் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் விபசாரம் நடப்பதாக சிந்தாதரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்தில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்களை விபசாரத்தில் ஈடுபட வைத்த 4 பேரில் 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

போலீசில் சிக்கிய அர்ஜூன், பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் மீட்டனர். கைதான 2 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்ணை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com