மலேசியாவில் தவித்து வந்த பெண் மீட்பு

5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.
மலேசியாவில் தவித்து வந்த பெண் மீட்பு
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் சித்தி விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக தனியார் ஏஜென்ட் மூலம் மலேசியா சென்றார், பின்னர் அங்கு தனக்கு உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் கொடுமை படுத்தி வருவதாகவும் தன்னை தமிழகம் மீட்க உதவுமாறு தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு வெளியான செய்தியின் அடிப்படையில், சுற்றுலாத்துறை அமைச்சரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இததையடுத்து அமைச்சர் ராமச்சந்திரன் தனது முயற்சியால் இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடுகள் மேற்கொண்டு சிவகாமியை மீட்டார்.

இதனையடுத்து சிவகாமி விமானம் மூலம் தமிழ்நாடு வந்தடைந்தார். பின்னர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com