search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பா.ஆதித்தனார்
    X
    சி.பா.ஆதித்தனார்

    சி.பா.ஆதித்தனார் பெயரில் ‘சிற்றிதழ்’ விருது - சட்டசபையில் அறிவிப்பு

    தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் பெயரில், சிற்றிதழ் பரிசு எனும் விருது அளிக்கப்பட உள்ளது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

    தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழை தெரிவு செய்து தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெயரில்  ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்.



    இந்த விருது ஒவ்வொன்றிற்கும் விருது தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், கேடயமும், பாரட்டிதழ் மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்
    என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×