search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு அறிவிப்பு"

    பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனவரி 14-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. #Pongal2019 #PongalHoliday
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழக அரசு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது.
     
    இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனவரி 14-ம் தேதி அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

    ஜனவரி 14-ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி பணி நாளாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ஜனவரி 14-ம் தேதி விடுமுறை என்பதால் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. #Pongal2019 #PongalHoliday
    சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். #ChennaiRain
    சென்னை:

    சென்னையில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. 

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே, கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். விடுமுறை கிடையாது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். #ChennaiRain
    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அரசின் அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோயும், தொற்றுநோயும் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகி உள்ளனர்.



    தற்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள குறிப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நாடகம்.

    ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றம் மூலம் ஆலையை திறக்க அரசு மறைமுகமாக உதவி செய்து வருகிறது. எனவே தமிழக அரசு மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது.

    தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலை மூடப்பட்டால் முழுமையான பலன் இருக்கும்.

    துப்பாக்கி சூடு குறித்து ஹென்றி டிபேன் தலைமையிலும், மனித உரிமைகள் கழகம் சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்கப்பட உள்ளன. இதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நீட் தேர்வு பாதிப்பால் தமிழகத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ ஆகியோர் இறந்துள்ளனர். இதற்கு மத்திய அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் 91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    சாதாரண மக்கள் மருத்துவம் படிக்கக்கூடாது என்பதே மத்திய அரசின் சதியாக உள்ளது. தமிழகத்தில் கல்வி பயின்றவர்கள் சிறந்த மருத்துவர்களாக விளங்கி வருகின்றனர்.

    அடுத்த ஆண்டு மே மாதம் மத்திய அரசின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு மோடி ஆட்சிக்கு வரமுடியாது. அதற்குள் மக்களுக்கு என்னென்ன கெடுதல்களை செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நிறைவேற்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #MDMK #Vaiko #SterlitePlant

    ×