என் மலர்

  செய்திகள்

  விடுதியில் காதலனுடன் வி‌ஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
  X

  விடுதியில் காதலனுடன் வி‌ஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேப்பாக்கம் விடுதியில் காதலனுடன் வி‌ஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழந்தார். காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  சென்னை:

  சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சுமர்சிங். இவர் அதே பகுதியை சேர்ந்த கஜல் என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

  கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். பாரிமுனையில் உள்ள ஒரு கல்லூரியில் கஜல் பி.காம் படித்து வந்தார்.

  நேற்று மாலை சுமர்சிங்கும் கஜலும் சந்தித்து பேசினர். பின்னர் சேப்பாக்கம் மியான் சாகிப் தெருவில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் 2 பேரும் வி‌ஷம் குடித்துள்ளனர்.

  இன்று காலை 7.30 மணி அளவில் பார்த்தபோது, 2 பேரும் அறையில் மயங்கி கிடந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கஜல் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  சுமர்சிங் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சுமர்சிங்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  Next Story
  ×