என் மலர்

  செய்திகள்

  அமமுக தொண்டர்களை இழுக்க அதிமுக திட்டம்
  X

  அமமுக தொண்டர்களை இழுக்க அதிமுக திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருநெல்வேலி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அ.ம.மு.க.வினரை இழுக்க அமைச்சர்கள் தூது விட்டு வருகின்றனர்.
  சென்னை:

  பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும் பின்னடைவை சந்தித்தாலும் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அந்த கட்சிக்கு எதிர்பார்த்த வாக்குகளும் கிடைக்கவில்லை.

  அ.ம.மு.க.வில் விருப்பம் உள்ளவர்கள் இருக்கலாம். போகிறவர்களை தடுக்க முடியாது என்று டி.டி.வி. தினகரன் பேசிய பேச்சு அக்கட்சியில் உள்ளவர்களை யோசிக்க செய்துள்ளது.

  இதன் காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.க.வில் சேர தொடங்கி உள்ளனர்.

  திருநெல்வேலி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் அ.ம.மு.க.வினரை இழுக்க அமைச்சர்கள் தூது விட்டு வருகின்றனர்.

  அ.தி.மு.க.வுக்கு வந்தால் உள்ளாட்சி அமைப்பு முதல் பல்வேறு பதவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்புகளை ஏன் இழக்க வேண்டும்.


  எனவே தாய் கழகத்துக்கு வந்து விடுங்கள், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை எளிதில் அணுகலாம். பிரச்சனைகளை சொன்னால் அதை தீர்த்து வைப்பார்கள் என்று அமைச்சர்கள் தூது விடுகின்றனர்.

  தென் மாவட்டங்களில் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு அ.தி.மு.க.- அ.ம.மு.க. ஓட்டுகள் பிரிந்ததுதான் காரணம் என்பதை அ.தி.மு.க. மேலிடம் கண்கூடாக அறிந்துவிட்டது.

  இரு கட்சிகளின் ஓட்டுகளை கூட்டினால் தி.மு.க.வை விட அதிக ஓட்டு கிடைக்கிறது.

  பெரியகுளம் சட்டசபை தொகுதியில் தி.மு.க. வாங்கிய வாக்குகள் 88,393 அ.தி.மு.க.வுக்கு 68,073 வாக்குகளும், அ.ம.மு.க.வுக்கு 26,338 வாக்குகளும் கிடைத்துள்ளது. இந்த இரு கட்சிகளின் வாக்குகளை கூட்டினால் 94,411 ஆகும். அதாவது தி.மு.க. வாங்கியதை விட கூடுதலாக 6,018 வாக்குகள் வருகிறது.

  எனவே அடுத்து வரும் தேர்தலுக்குள் அ.ம.மு.க.வில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களை அ.தி.மு.க.வுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அ.தி.மு.க. மேலிடம் கட்டளையிட்டுள்ளது.

  ஏற்கனவே 2 மாவட்டத்தில் இருந்து அ.ம.மு.க.வினர் வந்துவிட்டது போல் மற்ற மாவட்டங்களிலும் அ.ம.மு.க.வினரை இழுக்க அமைச்சர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
  Next Story
  ×