என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கஜா புயல்- அசுர வேகத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கை தேவை: ஜிகே வாசன்
Byமாலை மலர்11 Nov 2018 12:58 PM IST (Updated: 11 Nov 2018 12:58 PM IST)
கஜா புயல் வரவுள்ள நிலையில் தமிழக அரசு அசுர வேகத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #Gaja #Storm #TNGovt #GKVasan
மன்னார்குடி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மன்னார்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மன்னார்குடி அருகே வடுவூரில் பொது மக்களுக்கு இடையூறாய் இருந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று த.மா.கா.வும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில் மற்றொரு மதுக்கடை திறக்கப்பட்டிருப்பதை கண்டிக்கிறேன்.
இலங்கையில், ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது. அங்கே வாழும் ஈழத்தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர், அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக வாழ, மத்திய அரசு செயலாற்ற வேண்டும்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லாபம் அடைந்தவர்கள் வசதி படைத்தவர்கள் மட்டுமே. இதனால் பொதுமக்களுக்கு பாதகம் தான்.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. கஜா புயல் வரவுள்ள நிலையில் தமிழக அரசு அசுர வேகத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும். சத்துணவு, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை போக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Gaja #Storm #TNGovt #GKVasan
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மன்னார்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மன்னார்குடி அருகே வடுவூரில் பொது மக்களுக்கு இடையூறாய் இருந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று த.மா.கா.வும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில் மற்றொரு மதுக்கடை திறக்கப்பட்டிருப்பதை கண்டிக்கிறேன்.
இலங்கையில், ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது. அங்கே வாழும் ஈழத்தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர், அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக வாழ, மத்திய அரசு செயலாற்ற வேண்டும்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லாபம் அடைந்தவர்கள் வசதி படைத்தவர்கள் மட்டுமே. இதனால் பொதுமக்களுக்கு பாதகம் தான்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது போல காலியான 2 தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்பதும் தெரியவில்லை. ஆகவே 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும். சத்துணவு, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை போக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Gaja #Storm #TNGovt #GKVasan
Next Story
×