search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர லாரி உரிமையாளர்களை அழைத்து பேசவேண்டும்- ஜிகே மணி
    X

    ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர லாரி உரிமையாளர்களை அழைத்து பேசவேண்டும்- ஜிகே மணி

    ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர லாரி உரிமையாளர்களை அழைத்து பேச வேண்டும் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். #PMK #GKMani #LorryStrike
    சேலம்:

    சேலம் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி கலந்துகொண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ம.கட்சி தொடங்கப்பட்டு 29 ஆண்டுகளை நிறைவு செய்து இப்போது 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. பா.ம.க.தான் கொள்கையை சொல்கிற கட்சி, மக்கள் பிரச்சனைக்கு போராடுகிற கட்சி, டாக்டர் ராமதாஸ் அவர்களின் நாள்தோறும் அறிக்கை பெரிய வலுசேர்த்து இருக்கிறது. இதெல்லாம் நாளை தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அறிகுறிகள் என்பது தான் இப்போதைய யதார்த்த நிலையாக உள்ளது.

    வருகிற 27-ந்தேதி அவர் சேலம் மாவட்டத்திற்கு வருகிறார். அன்று ஜலகண்டாபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது. 28-ந்தேதி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சேலம் 5 ரோட்டில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


    மேட்டூர் அணை உபரி நீர் சேலம் மாவட்டம் முழுவதும் அரசு பயன்படுத்த வேண்டும். சரபங்கா நதி, வசிஷ்ட நதி உள்ளிட்ட அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் ஏரிகளில் 2, 3 ஆண்டுகள் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது தான் மாவட்டம் செழிக்கும். அரசு காலம் தாழ்த்தக் கூடாது. உடனே இதை நிறைவேற்ற வேண்டும்.

    அரசு லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் புறக்கணித்த காரணத்தினால் இன்றைக்கு அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. பருப்பு, அரிசி எந்த பொருட்களும் வெளிமாநிலங்களில் இருந்து வரவில்லை. இதனால் விலைவாசி உயருமோ என பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தால் அவர்களை அழைத்து பேசி அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #GKMani #LorryStrike
    Next Story
    ×