search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரில் மதுபாட்டில்கள் கடத்திய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது
    X

    காரில் மதுபாட்டில்கள் கடத்திய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது

    புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மது பாட்டில்கள் கடத்தி சென்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் விழுப்புரம் கம்பன் நகரில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையிலிருந்து வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை செய்தனர்.

    அந்த காரில் 170 மதுபாட்டில்கள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பாபு(வயது40), மற்றும் அவரது உறவினர் ராஜ்குமார்(55) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இவர்களில் ராஜ்குமார் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். சென்னையில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக பாபுவும், ராஜ்குமாரும் புதுவையிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி கொண்டு சென்னைக்கு செல்லும் போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். காரும், 170 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுவிலக்கு சோதனை சாவடியில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரே புதுவையிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×