search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் பீதி
    X

    கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை: பெசன்ட் நகரில் பொதுமக்கள் பீதி

    தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தமிழக அரசுடன் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டது.
    சென்னை:

    தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தமிழக அரசுடன் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டது.

    இதற்காக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விழுப்புரம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கடலோர கிராமங்களில் நடந்த சுனாமி ஒத்திகை மிகவும் தத்ரூபமாக நடத்தி முடிக்கப்பட்டது.

    இந்த மாவட்டங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட சில மீனவ கிராமங்களை தேர்வு செய்து சுனாமி ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் பெசன்ட் நகர் ஊசூர்குப்பம், கிழக்கு கடற்கரை சாலையில் நயினார்குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஒத்திகை நடத்தப்பட்டது. பெசன்ட் நகரில் நடந்த ஒத்திகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் பொதுமக்களும் பங்கேற்றனர்.


    பொதுமக்களில் சிலர் கடலில் மூழ்குவது போல நடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

    சுனாமி வந்தால் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற முடியாத வயதான மூதாட்டிகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு ஓடினர்.


    இன்னும் சற்று நேரத்தில் சுனாமி வரப்போகிறது என்று ஒலிபெருக்கியில் போலீசார் எச்சரித்தனர். இதனைக் கேட்டதும் சுனாமி பாதுகாப்பு ஒத்திகையை பார்த்தும், வேடிக்கை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆட்டோ டிரைவர் ஒருவர் இதனை உண்மை என நம்பி அங்கிருந்து வேகமாக ஆட்டோவை ஓட்டிச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த ஒருவர் அவரிடம் இது சுனாமி ஒத்திகைதான். பயப்பட வேண்டாம் என்று விளக்கி கூறினார். இதன் பிறகு அந்த ஆட்டோ டிரைவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
    Next Story
    ×