என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் மூதாட்டி கொலை: உறவுக்கார வாலிபரிடம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்19 Aug 2017 9:17 AM GMT (Updated: 19 Aug 2017 9:18 AM GMT)
தர்மபுரியில் 75 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவுக்கார வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி பிடமனேரி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சாலம்மாள் (வயது 75). இவர் வீட்டருகே பெட்டிக்கடை வைத்துள்ளார்.
அதே பகுதியில் மாரியப்பனின் உறவினர் மகன்கள் சேகர், கோவிந்தராஜ் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இதில் சேகர் தள்ளுவண்டியில் கூலி வியாபாரம் செய்து வருகிறார்.
வண்டியை வீட்டருகே நிறுத்தியது தொடர்பாக சேகரிடம் கோவிந்தராஜ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த சாலம்மாள் கோவிந்தராஜை சத்தம் போட்டார். ஏன் அடிக்கடி சேகரிடம் தகராறு செய்கிறாய் என்று கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் கோபத்தில் சாலம்மாளின் கழுத்தை நெறித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த சாலம்மாள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துபோனார்.
இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து சென்று சாலம்மாள் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கோவிந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×