என் மலர்

  செய்திகள்

  கொல்லிமலை அருகே 4 வயது மகனுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை
  X

  கொல்லிமலை அருகே 4 வயது மகனுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்லிமலை அருகே 4 வயது மகனுக்கு வி‌ஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  கொல்லிமலை:

  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே குண்டூர்நாடு தேனூர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 35) விவசாயி.

  இவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராமர்-சுமதி தம்பதியினரின் மகள் சரோஜா (27) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

  இவர்களது காதல் திருமணத்துக்கு சரோஜாவின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் 2பேரும் கொல்லிமலையில் தனியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் சவுந்தரராஜன் என்ற ஒரு ஆண் குழந்தையும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது.

  இதையடுத்து முதல் குழந்தை பிறந்த தகவல் சரோஜாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் சரோஜாவை பார்க்க வரவில்லை.

  இதையடுத்து 2-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவல் கொடுத்தும் யாரும் வராததால் சரோஜா மன முடைந்த காணப்பட்டார்.

  அன்பரசு நேற்றிரவு தனது தோட்டத்தில் விளைந்த பழங்களை எடுத்துக் கொண்டு சந்தையில் விற்பதற்காக சோளக்காடு என்ற ஊருக்கு சென்றார். நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த சரோஜா வி‌ஷம் மருந்தை எடுத்து தனது 4வயது மகனான சவுந்தரராஜனுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வீட்டில் இருந்த 3மாத கைக்குழந்தை திடீரென்று அழத்தொடங்கியது. நீண்ட நேரம் குழந்தையின் அழுகை குரலை கேட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டின் கதவை தட்டினார்.

  அப்போது கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சரோஜாவும், அவரது மகனும் பிணமாக கிடந்தனர்.

  இதுகுறித்து வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரோஜா, சவுந்தரராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்த சம்பவம் குறித்து அன்பரசு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த அவர் பிணமாக கிடந்த மனைவி மற்றும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×