என் மலர்

  செய்திகள்

  திருவண்ணாமலையில் ஆள்இல்லா விமானம் பறக்கவிட்ட சென்னை வாலிபர் கைது
  X

  திருவண்ணாமலையில் ஆள்இல்லா விமானம் பறக்கவிட்ட சென்னை வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலையில் ஆள் இல்லா விமானம் பறக்க விட்ட சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆள் இல்லா குட்டி விமானம் பறந்தது. இது பற்றி தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விமானத்தை கண்காணித்தனர். அது வேலூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தரை இறங்கியது. போலீசார் மண்டபத்துக்கு விரைந்தனர்.

  அங்கிருந்து வாலிபர் ஒருவர் குட்டி விமானத்தை இயக்கியதை கண்டு பிடித்தனர். அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

  அவர் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த முருகேசன் (வயது27) எனத் தெரிந்தது. விமானம் பறக்க விட தடை இருப்பதால் போலீசார் முருகேசனை கைது செய்தனர். குட்டி விமானத்தையும் பறிமுதல் செய்தனர்.

  எதற்காக விமானத்தை பறக்க விட்டார் என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×