என் மலர்

  செய்திகள்

  மதுரையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: முதியவர் பலி
  X

  மதுரையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்: முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் பலியானார் மற்றும் 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  மதுரை:

  மதுரை பொன்மேனி சுரேந்திரன் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது77). இவரது மகன் பிரபாகரன் (47). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

  பொன்மேனி பை-பாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மேல பொன்னகரம் 8-வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் விஜயகுமார் (28) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

  இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர். உடனே அங்கு இருந்தவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். பிரபாகரன், விஜயகுமார் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×