search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் பலி"

    • ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி நெருப்பூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த கொளந்தையப்ப கவுண்டர் மகன் மாதையன் (வயது 60). விவசாய கூலித்தொழிலாளி.

    இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்பொழுது ஒகேனக்கல் வனப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

    அதேபோல் ஒற்றை யானைகளும் அவ்வப்போது வனச்சாலையில் ரோந்து வருவதும் வழக்கம்.

    இந்த நிலையில் மாதையன் ஒகேனக்கல் பெரிய பள்ளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்த ஒற்றை யானை திடீரென அவரை தாக்கி உள்ளது. இதனால் மாதையன் சம்பவ இடத்திலேயே உடல் முழுவதும் அடிபட்டு அங்கேயே பலியாகினார்.

    இதை வனப்பகுதியில் இருந்த சிலர் பார்த்து ஒகேனக்கல் வனத்துறைக்கும், போலீசாருக்கும் நேற்று 4 மணி அளவில் தகவல் கொடுத்துள்ளனர். நேற்று மாலை வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு மாதையன் சடலத்தை மீட்க போராடியும் யானை மிகுந்த பகுதியாக உள்ளதால், முடியவில்லை.

    எனவே இன்று காலை மீண்டும் ஒகேனக்கல் வனத்துறை மற்றும் போலீசார் உதவியுடன் மாதையன் உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்னர்.

    இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமண வீட்டுக்கு வந்தவர்கள் பால்ராஜ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
    • முதியவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியடைய செய்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு குண்டு மலை அருகே தென்மலா பகுதியில் தேயிலை தோட்டங்கள் இருக்கிறது. இங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கோவையை சேர்ந்த பால்ராஜ் (வயது79) என்பவர் கலந்து கொண்டார்.

    நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு அருகே காட்டு யானை புகுந்ததாக தெரிகிறது. திருமண வீட்டில் ஒலி பெருக்கி ஒலிக்கப்பட்டிருந்ததால் காட்டு யானை வருவதை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் காட்டுயானை வருவதை பால்ராஜ் பார்த்திருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க ஓடியிருக்கிறார். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவரால் வேகமாக ஓட முடியவில்லை. இதனால் பால்ராஜை யானை தாக்கியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காட்டு யானை மிதித்து கொன்றது.

    இந்நிலையில் காட்டு யானை தாக்கியதில் பால்ராஜ் இறந்துகிடந்ததை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தனர். திருமண வீட்டுக்கு வந்தவர்கள் பால்ராஜ் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பால்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களை பீதியடைய செய்திருக்கிறது. முதியவரை கொன்ற யானை அந்த பகுதியில் உள்ளதா? என்று வனத்துறையினர் தேடிப் பார்த்தனர். ஆனால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு நேரத்தில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • சாலையை கடக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 62). இவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    இந்த நிலையில் கலைச்செல்வன் நேற்று இரவு வீட்டிற்கு செல்வதற்காக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்றார்.

    வாலாஜா நோக்கி வந்த ஆட்டோ கலைச்செல்வன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கிருந்தவர்கள் கலைச்செல்வனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 90). இவர் இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், துரைசாமி மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு துரைசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மதுரை நோக்கி வந்த லாரி பயங்கரமாக மோதியது.
    • தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(70). விவசாயி. இவர் சாலையை கடக்க முயன்றபோது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த திராட்சை லாரி பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி டிரைவர் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை தெற்கு பகுதியை சேர்ந்தவர் ராமையன் (வயது 82).

    இவர் தனது மகன் சுப்பிரமணி யனுடன் (53) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் பகுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்திருந்த ராமையன் மயக்கம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராமையன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே. கே. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை கொண்டலாம்பட்டி போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாட்னா ஹம்சபர் ரெயில் முதியவர் மீது மோதியது.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எண்ணூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு சுமார் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த பாட்னா ஹம்சபர் ரெயில் முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மெயின் ரோட்டை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் மீது மோதியது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் யார் என விசாரணை

    தக்கலை :

    தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவர் இன்று காலை டீ குடிக்க தக்கலை பனவிளை அருகில் உள்ள டீ கடைக்கு சென்று விட்டு திரும்பினார். மெயின் ரோட்டை கடக்கும் போது தக்கலையில் இருந்து அழகியமண்டபம் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர் பரிசோதனை செய்து விட்டு தேவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது சம்மந்தமாக இவரது மகன் ஏவின் ராஜா ஷாஜி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்

    • இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது.
    • வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி. இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இதனால் தலையில் பலத்த அடிபட்டு வாய்க்காலில் இருந்து மேலே எழுந்து வர முடியாமல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயமடைந்தார்.
    • அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தேனி, அக்.19-

    தேனி மாவட்டம் நாகலா புரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி(65). இவரது மனைவி இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாததால் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    திருப்பூர்:

    திருப்பூர் -வஞ்சிபாளையம் இடையே சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×