மினி வேன்-கார் மோதி முதியவர் பலி

திருமங்கலம் அருகே மினி வேன்-கார் மோதி முதியவர் பலியானார். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற 11 பேர் காயமடைந்தனர்.
மினிவேன் கவிழ்ந்து கிடப்பதையும், சேதமடைந்த காரையும் காணலாம்.
மினிவேன் கவிழ்ந்து கிடப்பதையும், சேதமடைந்த காரையும் காணலாம்.
Published on

திருமங்கலம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது தந்தை இறந்த துக்க நிகழ்ச்சிக்காக வாடிப்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியை சேர்ந்த சோலையப்பன், குருசாமி, பழனிச்சாமி, முப்பிடாதி, ஆறுமுகம், அழகர்காளை, முத்துக்காளை, மணி உள்ளிட்ட 11 பேர் மினி வேனில் புறப்பட்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் அதே வேனில் விராலிப்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி வளைவில் சென்றபோது திருமங்கலத்தில் இருந்து வந்த கார், மினி வேன் மீது மோதியது. இதில் மினி வேன் தலை குப்புற கவிழ்ந்தது. வேனில் பயணம் செய்த 11 பேரும் படுகாயம் அடைந்தனர். காரில் வந்த தென்காசி சித்தாபுரத்தை சேர்ந்த சுப்புராஜூம்(வயது59) காயமடைந்தார்.

தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காயமடைந்த சோலையப்பன்(68) மதுரைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com