அஞ்செட்டி அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி

மாடுகளை ஓட்டி வர மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அஞ்செட்டி அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி
Published on

தளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள ஜேசுராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதலை முத்து (வயது60). இவர் நேற்று தனது மாடுகளை அருகில் உள்ள சின்னமலை காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் மாலையில் மாடுகளை ஓட்டி வர மீண்டும் காட்டுப்பகுதிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் இன்று காலை அவரை தேடி காட்டு பகுதிக்கு சென்றபோது அங்கு மதலை முத்து யானை தாக்கி உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற அஞ்செட்டி வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com