என் மலர்
செய்திகள்

மதுரையில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 2 பெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு
மதுரையில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் மின்வாரிய என்ஜினீயர் உள்பட 2 பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (64). இவர் விளக்குத்தூண் பகுதியில் நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ராஜேஸ்வரி அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.
இது குறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
மதுரை வளர்நகரைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி உஷா (40). மின்வாரிய அலுவலக என்ஜினீயராக உள்ளார்.
நேற்று மதியம் இவர் உணவு சாப்பிட மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், உஷா அணிந் திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி னர்.
இது குறித்து உஷா புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story