என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ள நிலையில் கலைஞர் பெயரில் இல்லை.
- கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்கிறோம்.
கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி பேசியதாவது:
* தமிழகத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இல்லை.
* காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ள நிலையில் கலைஞர் பெயரில் இல்லை.
* நேரு, இந்திரா காந்தி பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதேபோல் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை.
* அரசியல் ரீதியாக தி.மு.க. - பா.ம.க. இடையே கருத்துவேறுபாடு இருந்தாலும் கலைஞர் பேரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கோருகிறோம்.
* கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்கிறோம்.
* கலைஞர் பெயரில் பல்கலை. அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர்.
- பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் அரசின் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அதேபோல் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில், துலுக்கன்குறிச்சி பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை தனித் தாசில்தார் திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர் அருண் குமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முன்னதாக துலுக்கன்குறிச்சியில் உள்ள மஞ்சுநாத் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற் சாலை கடந்த 2020-ல் பட்டாசு வெடி விபத்து காரணமாக பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உரிமத்தை மீண்டும் புதுப்பிக்காமல் அந்த தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வின் போது அங்கு, பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த வெம்பக்கோட்டை மற்றும் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 36), மதன்குமார் (32), செந்தமிழ் வெற்றி பாண்டியன் (40), இளஞ்செழியன் (40), மணிகண்டன் (38), விஜயகுமார் (40), மஞ்சுநாத் குமார் (40) ஆகியோர் வருவாய்த் துறையினர் ஆய்வுக்கு வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து துலுக்கன் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் பட்டாசு தயாரித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பேன்சி ரகவெடிகள், சோல்சா வெடிகள், மேலும் முழுமையடையாத பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
- சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
- ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் போலீசார் சோதனை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
அப்போது வாலிபர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பண்டல் பண்டலாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பண்டல்களை பிரித்து சோதனை செய்தனர்.
இதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த வாலிபரையும் பண்டல்களையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் அந்த வாலிபரை விசாரித்தனர். அப்போது அவரது பெயர் நவீன் அன்வர்(வயது 30) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் ரூ.40 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வருமான வரித்துறையினர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது
- பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- குழந்தை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் ராஜமங்கலத்தில் பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நைட்டி உடையில் குழந்தையின் உடலை சுற்றி குப்பையில் வீசிச் சென்றுள்ளனர். குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் குழந்தையின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.
- போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் பிரபல பால் பண்ணையின் தொழிற்சாலை அவல்பூந்துறை அடுத்த காதக்கிணறு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த தொழிற்சாலையில் முறையாக சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றுவதில்லை என பல ஆண்டுகளாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள காதக்கிணறு, செம்மண் குழி, காட்டு வலசு, மின்னல் காட்டு வலசு உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் நீர் மாசுவை தொடர்ந்து காற்று மாசுவும் இந்த ஆலை ஏற்படுத்துவதால் மூச்சு திணறல் ஏற்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர். கடுமையான நெடியுடன் துர்நாற்றம் வீசும் மாசு காற்று காரணமாக வீடுகளுக்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் வீடு முழுவதும் கருந்துகள்கள் படிந்து சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினர்.
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த கிராம மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர். ஆனால் ஆலை நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று நள்ளிரவு வீடுகளுக்குள் தூங்க முடியாமல் பரிதவித்த கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திடீரென ஆலை முன் திரண்டு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையடுத்து அங்கு ஆலை நிர்வாகத்தின் சார்பில் வடமாநில தொழிலாளி ஒருவர் தமிழ் தெரியாத நிலையில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் தமிழ் தெரிந்த நிர்வாகிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் சமாதானம் பேசினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மொடக்குறிச்சி போலீஸ் ஆய்வாளர் மற்றும் போலீசார் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதுவரை எத்தனை முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தீர்கள், ஏன் இரவில் வந்து இதுபோன்ற போராட்டம் நடத்துகிறீர்கள், முதலில் சென்று மாவட்ட கலெக்டர் அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளியுங்கள், எங்கும் புகார் தெரிவிக்காமல் இது போன்று போராட்டம் நடத்தக்கூடாது என பொது மக்களிடம் பேசினார்.
மேலும் காவல் நிலையத்திற்கு நாளை நேரில் வாருங்கள் அங்கு வந்து புகார் அளித்தால் ஆலை நிர்வாகத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை அடுத்து அங்கிருந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து இன்று மதியம் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஆலை நிர்வாகம், பொது மக்கள் சார்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தையும் தொட்டது. நேற்று முன்தினம் மட்டும் கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் விலை அதிகரிக்கும் என சொல்லப்பட்ட நிலையில், 'அந்தர்பல்டி' அடித்தது போல், நேற்று முன்தினம் எந்த அளவுக்கு உயர்ந்ததோ, அதே அளவுக்கு நேற்று குறைந்து இருந்தது.
அதன்படி, நேற்று கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-04-2025- ஒரு கிராம் ரூ.111
22-04-2025- ஒரு கிராம் ரூ.111
21-04-2025- ஒரு கிராம் ரூ.111
20-04-2025- ஒரு கிராம் ரூ.110
19-04-2025- ஒரு கிராம் ரூ.110
- கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
- மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னணு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வாழ்த்துகள்.
சென்னை:
2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடந்த 2024-25 நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23 சதவீதம் அதிகமாகும். மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்னணு சுற்றுச்சூழல் அமைப்புக்கும் வாழ்த்துகள். இது உண்மையிலேயே பெருமைக்குரிய தருணம்.
கடந்த ஆண்டு 9.56 பில்லியனிலிருந்து இந்த ஆண்டு 14.65 பில்லியனாக 53 சதவீதம் மகத்தான வளர்ச்சி. இது வெறும் ஆரம்பம் தான். மின்னணு ஏற்றுமதியில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இதோ வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.
- பராமரிப்பு பணிகள் காரணமாக அவ்வப்போது மின் தடை செய்யப்படுவது வழக்கம்.
- மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நாளை ஏப்ரல் 24-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் நாளை ஏப்ரல் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் தொடர்பான அறிவிப்பை மின்சார வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 24-04-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சின்னக்கடை வீதி முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், பட்டை கோயில், மேட்டு தெரு, ஈஸ்வரன் கோயில் பகுதி, ப்ரெட்ஸ் ரோடு, அருணாச்சலம் ஆசாரி தெரு, கடைவீதி, கல்லாங்குத்து ஒரு பகுதி, ஏடிசி டிப்போ, கோவிந்தன் தெரு, பெரியார் தெரு, வ உசி மார்க்கெட், மடம் தெரு, பழைய பேருந்து நிலையம், வணக வளாகம், சிங்க மெத்தை, அசோக்நகர், பாலாஜி நகர், பச்சப்பட்டி, வித்யா நகர், அம்மாபேட்டை மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்க தெரு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
- மே 12-ந்தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் அடுத்த மாதம் 12-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அன்றைய தினம் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூன் மாதம் 14-ந்தேதி (சனிக்கிழமை) விடுமுறை தினத்தை வேலை தினமாக ஈடுசெய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே மே மாதம் 12-ந்தேதி அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலம் மற்றும் வங்கிகள் மற்றும் அவசர அலுவல்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மையோனைஸ் தயாரிக்க பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- மையோனைஸ் உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
முட்டையில் இருந்து செய்யப்படும் மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மையோனைஸ் என்பது முட்டை மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலா பொருட்கள் கலந்த ஒரு உணவுப்பொருள். இதை தயாரிக்க பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மையோனைஸ் உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழில், ஏப்ரல் 8-ந்தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விருந்தின்போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு சாப்பிட்டார்.
- விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை உற்சாகத்தோடு வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளார்.
இதன்படி இன்று இரவு சென்னை அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இன்று இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் 7 வகையான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.
மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகியவை பரிமாறப்படுகிறது. அதே நேரத்தில் அசைவ சாப்பாட்டை விரும்பாதவர்கள், சைவ உணவை சாப்பிடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சைவ உணவில் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, ஆகியவற்றுடன் சாதம் சாம்பார், ரசம், பொரியல், அவியல் போன்றவையும் இடம் பெற்றிருந்தன.
இந்த இரவு விருந்தின்போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு சாப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி அளித்துள்ள இரவு விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்களுக்கு விருந்தளித்த நிலையில் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்த செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களை தனியாக சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடிகிறது.
- விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.






