என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 46 குழந்தைகள் பிறந்தன.
    • தென்காசியில் 20 குழந்தைகள் பிறந்துள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் ஆங்கில புத்தாண்டோடு தங்களது பிறந்தநாளையும் சேர்த்து கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பிறந்துள்ளன.

    சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 46 குழந்தைகள் பிறந்தன. அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் பிறந்தன. இதில், 2 தாய்மார்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

    இந்த குழந்தைகளை ஆஸ்பத்திரியின் உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர் சந்திரகலா உள்ளிட்ட மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கைகளை தட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

    மேலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 7 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தை ஆகும். திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன. ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 12 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 7 பெண் குழந்தைகள் ஆகும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு தினமான நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் 4 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் என 8 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் புத்தாண்டு தினமான நேற்று 9 ஆண் குழந்தைகள், 11 பெண் குழந்தைகள் என 20 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் 11 (ஆண்-5, பெண்-6), குழந்தைகளும், நீலகிரியில் 6 (ஆண்-3, பெண்-3), திருப்பூரில் 13 (ஆண் -5, பெண்-8), வேலூரில் 8 (ஆண்-6, பெண்-2), குழந்தைகளும், திருவண்ணாமலையில் 22 (ஆண்-12, பெண்-10) குழந்தைகளும், திருப்பத்தூரில் 12 (ஆண் - 4, பெண்-8) குழந்தைகளும், ராணிப்பேட்டையில் 6 (ஆண் 2, பெண் 4) குழந்தைகளும் பிறந்துள்ளன.

    குமரி மாவட்டத்தில் 6 (ஆண் 1, பெண் 5) குழந்தைகளும், ஈரோட்டில் 12 குழந்தைகளும், திண்டுக்கல்லில் 20 (ஆண்-6, பெண்-14) குழந்தைகளும், தேனியில் 13 (ஆண் 7, பெண் 6) குழந்தைகளும், கடலூரில் 13 (ஆண் 6, பெண் 7) குழந்தைகளும், கள்ளக்குறிச்சியில் 47 (ஆண்-24, பெண்-23) குழந்தைகளும், விழுப்புரத்தில் 27 (ஆண் 15, பெண்-12) குழந்தைகளும், மதுரையில் 22 குழந்தைகளும், சிவகங்கையில் 7 குழந்தைகளும், ராமநாதபுரத்தில் 6 குழந்தைகளும், விருதுநகரில் 6 குழந்தைகள் பிறந்து உள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் 24 குழந்தைகளும் (ஆண் - 9, பெண் -15), தூத்துக்குடியில் 12 (ஆண்-4, பெண்-8) குழந்தைகளும், தென்காசியில் 20 குழந்தைகளும் பிறந்துள்ளன.

    திருச்சியில் 13 (ஆண்-8, பெண்-4), பெரம்பலூரில் 10 (ஆண்-7, பெண்-3), அரியலூரில் 3 (ஆண்-2, பெண்-1), புதுக்கோடடையில் 14 (ஆண்-9, பெண்-5), கரூரில் 4 குழந்தைகள் (ஆண்-4) பிறந்துள்ளன. கிருஷ்ணகிரியில் 15 (ஆண் 7, பெண்8), தர்மபுரியில் 13 (ஆண் 7, பெண் 6), நாமக்கல்லில் 10 (5 ஆண், 5 பெண்), சேலத்தில் 29 குழந்தைகள் பிறந்துள்ளன. தஞ்சையில் 22 குழந்தைகளும், திருவாரூரில் 3 குழந்தைகளும், நாகையில் 6 குழந்தைகளும், மயிலாடுதுறையில் 16 குழந்தைகள் பிறந்துள்ளன.

    இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை சுமார் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.

    புதுச்சேரியை பொறுத்தவரை புத்தாண்டான நேற்று 26 குழந்தைகள் (ஆண்-12, பெண்-14) பிறந்துள்ளன.

    • குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
    • ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு குறைந்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் பாறையை ஒட்டி மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகை கால விடுமுறை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமானது குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் தென்காசி நகரப்பகுதி குத்துக்கல்வலசை, மேலகரம், குற்றாலம், வல்லம், மத்தளம்பாறை, திரவியநகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    இரவு 11 மணிக்கு மேல் மிகக் கனமழையாக கொட்டி தீர்த்ததால் முக்கிய அருவியான குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது

    மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளமானது பாதுகாப்பு வளைவைத் தாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் நிற்கும் பகுதி வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இதனால் இரவில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.இன்று காலையில் மழைப்பொழிவு சற்று குறைந்ததால் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியது.

    தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழ தொடங்கியது. எனினும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு காலையில் மெயின் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.

    ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவி மற்றும் புலியருவில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

    • ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவிப்பு.
    • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ அமைப்பினருடன் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

    ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் என அறிவித்ததன் எதிரொலியால் நாளை அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் எ.வ.லு அறையில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
    • புது வெற்றியை தேடித்தர உள்ள உடன்பிறப்புகளுடன் தொடங்கியது.

    2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    அப்போது அவர், புது வெற்றியை தேடித்தர உள்ள உடன்பிறப்புகளுடன் தொடங்கியது புத்தாண்டு என புத்தாண்டை ஒட்டி தன்னை சந்திக்க வருகை தரும் தொண்டர்களின் வீடியோக்களை வெளியிட்டு முதலமைச்சர் பகிர்ந்தார்.

    • பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
    • இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.

    இந்நிலையில், புத்தாண்டையொட்டி வடபழனி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    • காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
    • எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்.

    நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கணக்கை தொடங்குகிற விதத்தில் எங்கள் பணிகள் தொடங்கி இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் குரல் எழுப்புவார்கள்.

    தாமிரபரணியை காக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆணயத்தை அமைக்க வேண்டும். பொருநை அருங்காட்சியகம் நெல்லைக்கு பெருமை. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். அவருக்கு நன்றி, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.

    எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். தமிழகத்தில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். நடிகர் விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அரசியல் பொதுவெளியில் செய்யக்கூடிய விஷயம். அதை வீட்டுக்குள் இருந்து கொண்டு செய்ய முடியாது. நடிகர் விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதான்.

    பா.ஜ.கவால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை என்ற காரணம் என்னவென்றால் மக்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மாநில பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக சார்பில் போட்டியிட நேற்று வரை விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட 7,187 பேர் விருப்பு மனு அளித்துள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

    இதில், தங்கள் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என கூறி 2,187 பேர் விருப்ப மனு வழங்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கழக உடன்பிறப்புகள் தங்களுடைய விருப்ப மனுக்களை, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக்கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 15.12.2025 முதல் 23.12.2025 வரையிலும், மற்றும் 28.12.2025 முதல் 31.12.2025 வரையிலும் வழங்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள்.

    அதன்பேரில், ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கி உள்ளனர். அதன்படி, எடப்பாடி பழனிசாமி 'தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து 2,187 விருப்ப மனுக்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உடன்பிறப்புகள் 'தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டி', தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உட்பட 7,988 விருப்ப மனுக்களும், ஆக மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் வரும் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் 5ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டம் வரவிருக்கும் அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடுகள், கட்சி அமைப்பை வலுப்படுத்த புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தல், தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் நிலைப்பாட்டை மாவட்ட அளவில் தொண்டர்களிடம் கொண்டு செல்வது என மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மறைவுக்குப் பிறகு, கட்சி எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர்.

    மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் 6-வதுநாளாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள்.

    சென்னை எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் பாலத்தில் காலை 11.30 மணி அளவில் திரண்ட ஆசிரியர் ஆசிரியைகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது.

    அதனை மையப்படுத்தி தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஒரே வேலையை செய்து வரும் உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியர்களுக்கு கூடுதல் ஊதியமும் எங்களுக்கு குறைவான ஊதியமும் அளிக்கப்பட்டு வருகிறது.

    எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி இரவின் பாலத்தில் நடைபாதை ஓரமாக அமர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், தினமும் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இடைநிலை ஆசிரியர்களின் இந்த தொடர் போராட்டம் காரணமாக சென்னை மாநகர போலீசார் தினமும் எங்கு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    லட்சத்தீவு- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    3-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    7-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    நாளை முதல் 5-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து பெரியமேடு, வேப்பேரி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பெண்கள் 12 ஆண்கள் உட்பட 45 தூய்மை பணியாளர்களை கைது செய்து கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அனைவரையும் நேற்று இரவு கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அப்போது சரஸ்வதி, நிர்மலா, மகேஸ்வரி, தனலட்சுமி ஆகிய 4 தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சக தூய்மை பணியாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸார் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நிறுத்தாமல் நேராக கோயம்பேடு நோக்கி சென்றதால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் பஸ்சிலேயே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்ற தூய்மை பணியாளர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு.

    சென்னை:

    சென்னையில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னையில் நாளை மறுநாள் (03.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    எம்எம்டிஏ காலனி: ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை கமலா நேரு நகர் 1 மற்றும் 2வது தெரு, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100 அடி சாலை.

    அரும்பாக்கம்: மேத்தா நகர், என்எம் சாலை, எம்எச் காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட்ரேட் காலனி, அய்யாவூ காலனி காயத்ரி தேவி, ரசாக் கார்டன், ஜேடி துராஜ் ராஜ் நகர், ஆசாத் நகர், விஜிஏ நகர், எஸ்பிஐ அதிகாரி.

    அழகிரி நகர்: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோவில் தெரு, பெரியார் பாதை, அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.

    சூளைமேடு: சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2வது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நம்சிவாயபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகந்தன் தெரு, கான் தெரு.

    கோடம்பாக்கம்: பஜனை கோவில் 3வது, 4வது தெரு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    ×