என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நடிகர் விஜயின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும்- எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் முபாரக்
    X

    நடிகர் விஜயின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும்- எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் முபாரக்

    • காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
    • எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்.

    நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கணக்கை தொடங்குகிற விதத்தில் எங்கள் பணிகள் தொடங்கி இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் குரல் எழுப்புவார்கள்.

    தாமிரபரணியை காக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆணயத்தை அமைக்க வேண்டும். பொருநை அருங்காட்சியகம் நெல்லைக்கு பெருமை. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். அவருக்கு நன்றி, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.

    எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். தமிழகத்தில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். நடிகர் விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அரசியல் பொதுவெளியில் செய்யக்கூடிய விஷயம். அதை வீட்டுக்குள் இருந்து கொண்டு செய்ய முடியாது. நடிகர் விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதான்.

    பா.ஜ.கவால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை என்ற காரணம் என்னவென்றால் மக்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மாநில பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×