என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
- தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1400 உயர்ந்தது
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை உயர்ந்த நிலையில் தற்போது மீண்தும் தங்கம் விலை உயர்ந்தது.
ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.11,125க்கு விற்பனையாகிறது.
இன்று காலை ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,00க்கு விற்பனையாகிறது.
- 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞர்.
- நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீதிபதியை தாக்க முயன்றது நமது ஜனநாயகத்தில் உயர்ந்த நீதித்துறை மீதான தாக்குதல்.
நீதிபதியை தாக்க முயன்றது அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு இன்னும் நம் சமூகத்தில் நீடிக்கிறது என்பதை காட்டுகிறது.
தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையை காட்டுகிறது.
நீதிபதி பெருந்தன்மையாக கடந்து சென்றாலும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்
- அரியாம்பாளையம், தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர்
சேலம்:
சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்ெகாள்வதால் நாளை (7-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இளம்பிள்ளை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம்,
காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன் காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், தப்பகுட்டை, பெருமாகவுண்டம்பட்டி, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்
- கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி. கே.புதுக்கோட்டை,
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நாளை (7ம் தேதி) நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிரகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி மறவபட்டி, காப்பிளியபட்டி புதூர், முனியபிள்ளைபட்டி, அலக்குவார்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி. சென்னம்பட்டி, உலகம்பட்டி கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து,
கொண்டம நாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, பாப்பணம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, கெச்சாணிபட்டி, வெள்ளையம்பட்டி, ரெங்கப்பனூர், விட்டல்நாயக்கன்பட்டி. கே.புதுக்கோட்டை, தாதங்கோட்டை, பொம்மனங்கோட்டை, கொத்தபுள்ளி, அழகாநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு நிதி வழங்கியதால் தனியார் பள்ளியில் 25 சதவீத சேர்க்கைக்கு அனுமதி.
- இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
இலவச கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை இலவசமாக படிக்க வழி வகை செய்யும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் சேர்க்கப்படுகிறார்கள்.
தற்போது மத்திய அரசு நிதி வழங்காததால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் தனியார் பள்ளிகளில் இந்த வருடம் இலவச கல்வி திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியவில்லை.
இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்கியதால் மாணவர் சேர்க்கையை அரசு தொடங்கியுள்ளது. காலதாமதமாக தொடங்குவதால் மாணவர்கள் ஏற்கனவே பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்கள். இதனால் புதிதாக குழந்தைகளை சேர்க்க வாய்ப்பு இல்லை.
தற்போது தனியார் பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளை இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கனவே பெறப்பட்ட கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இன்று மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை தொடங்கியது. அனைத்து மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அவர்களுக்கு குழந்தைகளை இலவச கல்வி திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கக்கூடிய எல்.கே.ஜி., யு.கே.ஜி., 1-ம் வகுப்பு குழந்தைகளை இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்வி கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பணத்தை திருப்பி கொடுப்பது சிரமம். காலாண்டு தேர்வு முடிந்துவிட்ட நிலையில் கட்டணத்தை திருப்பி கொடுத்தால் தனியார் பள்ளிகளுக்கு நஷ்டம் பெருமளவில் ஏற்படும்.
காலதாமதத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் எப்படி பொறுப் பேற்க முடியும் என தனியார் பிரைமரி, நர்சரி, மெட்ரிக்கு லேசன் பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தற்போது இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாது. பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்து ரையாடுகிறார்.
- பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட 10 உரிமைகளை வலியுறுத்தி 'உரிமை மீட்க, தலைமை காக்க' என்ற தலைப்பில் நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் தனது பிரசார நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலையில் நெல்லைக்கு வரும் அன்பு மணி ராமதாஸ் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அன்புமணி ராமதாஸ் மாலையில் பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் வரும்போது அவரை வரவேற்கும் விதமாக அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள சவேரியர் ஆலயத்தில் இருந்து தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை வரையிலும் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு நெல்லை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை யில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அன்புமணி ராமதாஸ் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதே நேரம் பொதுக்கூட்டத்தை பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
- வேறுபட்ட கருத்துகளுக்குப் பதில் வன்முறை வழியைத் தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒப்புக்கொள்ள முடியாதது.
- அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கும் அனைவரும் இப்படிப்பட்ட செயல்களை கடுமையாகக் கண்டிக்க வேண்டும்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக இருப்பதாக கூறி அவர்மீது காலணியை வீசிய சமூகவிரோதியின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஒரு ஜனநாயக நாட்டில் எந்தவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை வாத–பிரதிவாதங்கள், சட்டரீதியான வழிமுறைகள் மற்றும் அமைதியான முறைகளால் எடுத்துரைப்பது தான் நாகரிகமான நடைமுறை. நீதித்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை குறிவைத்து இப்படிப்பட்ட அநாகரீக செயல் நடப்பது என்பது, நீதித்துறையின் சுதந்திரத்தையும், மாண்பையும் கேள்விக்குறியாக்குகிறது; சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான ஆபத்தான முன்னுதாரணமாக அமைகிறது; சமூக ஒற்றுமைக்கும் பொது அமைதிக்கும் விரோதமானதாகும்.
வேறுபட்ட கருத்துகளுக்குப் பதில் வன்முறை வழியைத் தேர்ந்தெடுப்பது, முற்றிலும் ஒப்புக்கொள்ள முடியாதது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீதித்துறையின் கண்ணியத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்கும் அனைவரும் இப்படிப்பட்ட செயல்களை கடுமையாகக் கண்டிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
- சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர்.
- சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும்.
தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி என்.செந்தில்குமார் முன் நடைபெற்றது.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்தற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும் எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.
முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் த.வெ.க. தலைவர் விஜயை நீதிமன்றம் விமர்சித்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
- இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
- சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார்.
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
ராமதாசின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருதயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ராமதாசை கண்காணித்து வருகின்றனர்.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் ராமதாஸ் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.
- ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
- ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
சென்னை:
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, ராமதாஸ் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ராமதாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவரை நேரில் சந்தித்து பேச முடியவில்லை என்று கூறினார்.
இதனிடையே, ராமதாசை உடன் இருந்து கவனித்து வருவதாகவும், உடல் ஆரோக்கியமுடன் நலமாக உள்ளார் என்றும் ஜி.கே.மணி கூறியுள்ளார். மேலும் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பா.ம.க.நிறுவனர் ராமதாசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவையும் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
- தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
- கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் நிதி. பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சி வேகத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மேட்டுப்பாளையத்தை பொறுத்தவரை ஒரு பைபாஸ் சாலை வேண்டும், அதற்கான வேலைகள் தயார் செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பேசியுள்ளேன்.
தமிழக கவர்னர் ரவி, தி.மு.க.வின் ஊழல்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறார்.
தி.மு.க. எப்போது பார்த்தாலும், ஏதாவது ஒரு பைலை அவருக்கு அனுப்புகிறது. அதுக்கு அவர் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், உடனே அவரை ஒரு மிகப்பெரிய ஒரு எதிரியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் ரவி சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார். தமிழக அரசு அவர் மீது வன்மம் கொண்டுள்ளது.
கரூர் சம்பவத்தை பொறுத்த அளவுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. எங்களுடைய என்.டி.ஏ. கூட்டணி எம்.பிக்கள் குழு அவர்களுடைய அறிக்கைகளை கொடுத்து இருக்கிறார்கள். அந்த அறிக்கை வெளிவந்த பிறகு அதை பத்தி பேசுகிறேன்.
ஊடகங்கள் முடக்கப்படுவது தமிழக அரசின் மிகப்பெரிய அராஜகத்தை தான் காட்டுகிறது. தி.மு.க., எப்போதுமே பத்திரிகையாளர்கள், மீடியாக்களை நசுக்குவதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டால் அவர்கள் நல்லவர்கள். எதிராக வெளியிட்டால் உடனே அவர்கள் கெட்டவர்கள்.
சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவுப்படுத்துகிறது. கரூர் நிகழ்வு குறித்து அறிக்கை வந்த பின் பேசுகிறேன்.
தமிழக பா.ஜ.க. கட்சியின் சார்பில் பூத்களை வலிமைப்படுத்தும் பணி ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக நடந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியான எங்களது கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக கூட்டணி கட்சித் தலைவர்கள் உடன் இணைந்து, வேலைகளை வேகப்படுத்தி செய்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின்போது கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கரு.மாரிமுத்து (கோவை வடக்கு), தர்மண் (நீலகிரி), செந்தில்குமார் (ஈரோடு வடக்கு), மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், கோவை வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ், மாவட்டசெயலாளர்கள் உமாசங்கர், விவசாய அணி மாவட்ட பொது செயலாளர் ஆனந்தகுமார் சாமிநாதன், காரமடை நகர தலைவர் சதீஸ்குமார், மேட்டுப்பாளையம் நகர தலைவர் கே.ஆர்.எஸ்.சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
- மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும். அந்த இந்தாண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை போனஸ் பெறுவார்கள்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு ரூ.376 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளேன்.
வீட்டு வசதி வாரியம், குடிநீர் வாரிய தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.
மின்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.
பல்வேறு கூட்டுறவு அமைப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணை தனியே வெளியிடப்படும்.
நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000 கருணை தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.






