என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கொங்கு, நீலகிரி எப்போதுமே பா.ஜனதாவுக்கு சிறப்பான இடம்.
- இந்த பகுதியில் இருந்துதான் வாஜ்பாய் காலத்தில் எம்.பி.யை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள்.
பிரதமர் மோடி இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
* என் அன்பார்ந்த தமிழக சகோதர, சகோதரிகளே வணக்கம்.
* கோவை கோணியம்மன், மருதமலை முருகனுக்கு என் வணக்கம்.
* அழகான தேயிலை தோட்டங்கள் இருக்கும் பகுதிக்கு வருவதற்கு ஒரு டீக்கடைகாரருக்கு சந்தோசமாக இருக்காதா என்ன?.
* அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
* கொங்கு, நீலகிரி எப்போதுமே பா.ஜனதாவுக்கு சிறப்பான இடம். இந்த பகுதியில் இருந்துதான் வாஜ்பாய் காலத்தில் எம்.பி.யை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள்.
* தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பா.ஜனதா ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது.
* தமிழகம் முழுவதும் சொல்கிறது மீண்டும் ஒருமுறை மோடியின் ஆட்சி.
* எங்களுடைய அரசு 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது.
* ஏதாவது பொய்களை சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே காங்கிரஸ், திமுக-வின் நோக்கம்.
* திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை.
* இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் எஸ்.சி., எஸ்டி, ஓபிசி மக்களுக்கு வீடு, மின்சாரம் கிடைக்கக் கூடாது என நினைத்தது. ஆனால் எங்களுடைய ஆட்சியில் வீடுகள் கட்டிக் கொடுத்தோம். குடிநீர் வழங்கினோம். மின்சாரம் வழங்கினோம்.
* குடும்ப அரசியல் நடத்தும் இந்த கட்சிகள் தலித் மக்கள் பதவிக்கு வரக் கூடாது என நினைத்தார்கள். நாங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தோம். அதையும் அவர்கள் எதிர்த்தார்கள்.
* இந்திய கூட்டணி இந்தியாவின் திறமையை நம்பவில்லை. கொரோனா தடுப்பூசி தயாரிப்போம் என்றபோது எள்ளி நகையாடினார்கள். ஆனால் தடுப்பூசி தயாரித்து சவால் விடுத்தோம். எதை முடியாது என்றார்களோ, அதை செய்து காட்டினோம்.
- தாளவாடி போலீசார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீசார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தாளவாடி மரூர், குருபுருன்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாளவாடி பகுதியைச் சேர்ந்த மாதவ சாமி மகன் மகேந்திரா (வயது 26), அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவப்பா மகன் பிரவீன் குமார் (27), ரங்க சாமி மகன் புருஷோத்தமா (31), நாராயண மகன் ரங்க சாமி (40), குருசாமி மகன் மாதேஷா (38), ரங்கசாமி மகன் மூர்த்தி (31), பசுவ ண்ணா (32), சித்தமல்லு (30), சித்தமல்லு கௌதா (40), மாதேவா (33), ராமே கௌதா (55), மாதேஷ் (55), மாதேவா (60), குமார் (38), மாதவசாமி (46), நாகராஜப்பா (35), குருசித்தச்சாரை, வசந்த் (24), மாதப்பா (54), சங்கரப்பா (64) ஆகிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.90 ஆயிரத்து 70 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைபோல் தாளவாடி மல்லன்குழி, மல்குதிபுரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுப ட்டுக் கொண்டிருந்த தாள வாடி பகுதியைச் சேர்ந்த நாகேஷ் (39), மஞ்சுநாதா (44), பீரேஷ் (34), சன்மதா (35), அருள்ராஜ் (42), தண்ட பாணி (50), சிவகுமார் (33), திருப்பதி (60), ரங்கசாமி (58), ஜடேசாமி (69), கர்நா டகா மாநிலத்தைச் சேர்ந்த நந்திஷ் (44), சென்னிமலை பகுதியைச் சேர்ந்த அம்மா சியப்பன் (64), தாளவாடி பகுதியை சேர்ந்த மகதே வ்சாமி (45), பக்தவசலா (35), சிவசாமி (42), வெங்கட்ரா மன் (59), ரஞ்சனா நாயகா (56), ரமணா (37), சித்தராஜ் (29) ஆகிய 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.39 ஆயிரத்து 930 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- பொதுமக்கள், பக்தர்கள் சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை:
நெல்லை மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி திருவிழாவினை முன்னிட்டு நெல்லை, வள்ளியூர், திசையன்விளை, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேரில் காண்பதற்காக செல்வார்கள்.
இதனால் தேவைக்கேற்ப சிறப்பு சேவையாக கூடுதல் பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இடங்களில் இருந்து 22-ந்தேதி காலை முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கவும், அதேபோல் சித்ரா பவுர்ணமி முடிந்து 23-ந்தேதி மாலை முதல் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வர வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
எனவே பொதுமக்கள், பக்தர்கள் இந்த சிறப்பு சேவைகளை பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13 மற்றும் 14-ந்தேதிகளில் தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
15-ந்தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
16-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
இன்று முதல் 14-ந்தேதி வரை: அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
இன்று மற்றும் நாளை: அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°-40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 33°-37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
இன்று மற்றும் நாளை: அடுத்த இரண்டு தினங்களுக்கு காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- தமிழ்நாடு திரை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை.
- தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் விடுமுறை.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்படக் கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.
- கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும்.
கே.கே. நகர்:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சி, ஊராட்சி தேர்தல்களில் மாவட்ட தலைவர்கள் எவ்வாறு பிரசாரம் மேற்கொள்வார்களோ அதேப்போன்று பிரதமர் மோடி பாராளுமன்றத் தேர்தலுக்காக டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து போகிறார். தமிழ்நாட்டில் கால் பதிக்க முடியுமா? என முயற்சிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. தமிழக மக்கள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் பா.ஜ.க.வை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மண் சமூக விடுதலைக்கான மண் சமூக நீதிக்கான மண். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு கருத்து ஒரு பார்வை உள்ளது. இந்திரா காந்தி இந்த தேசத்தின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார்.
தற்போது கச்சத்தீவு பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் வெஜ் பேங்கை இந்திரா காந்தி இந்தியாவுடன் இணைத்தார். அங்கு அது கனிம வளங்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதுகுறித்து ஏன் மோடி பேசவில்லை? கச்சத்தீவு குறித்து பேசுபவர்கள் முதலில் வெஜ் பேங்க் பற்றி பேச வேண்டும். பிரதமர் மோடி கடந்த பத்தாண்டு காலமாக சர்வாதிகாரி போல தான் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. காங்கிரசின் நடவடிக்கையால் மட்டுமே இந்தியா தலைநிமிர்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
- புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உவரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வீதி வீதியாக பிரசாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் உவரி போலீசார், சத்யா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
- யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
சென்னை:
பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை அதிகாரிகள் என்று என்று கூறி வாட்ஸ்அப் செயலி மூலம் 'கியூஆர்' குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்து உள்ளனர். எனவே யாரும் இது போன்று பேசுபவர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
- நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜம்மியத்துல் அஹ்லில் குர் ஆன் அமைப்பின் சார்பில் பெருநாள் தொழுகை ரேணுகா நகர் வளாகத்தில் நடைபெற்றது. தொழு கையினை முனிபி மகளிர் அரபி கல்லூரியின் முதல்வர் அப்துல் சமது பிர்தவ்ஸி நடத்தி வைத்தார். இந்த தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்காகவும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதே போல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் ரமலான் பண்டிகை தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.
- 21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.
- தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.
வேலூர்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். சென்னையில் நேற்று அவர் ரோடு ஷோ நடத்தினார்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பிரதமர் மோடி வேலூரில் பிரசாரம் செய்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.
இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வேலூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம், திருவண்ணாமலை பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், நரசிம்மன் (கிருஷ்ணகிரி), பா.ம.க. வேட்பாளர்கள் சவுமியா அன்புமணி (தர்மபுரி), வக்கீல் பாலு (அரக்கோணம்), கணேஷ் குமார் (ஆரணி) ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இதற்காக பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.
அங்கிருந்து காரில் கோட்டை மைதானத்திற்கு வந்தார். கோட்டை முன்பு அண்ணாசாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி கோஷம் எழுப்பியபடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
வேட்டி, சட்டை அணிந்து மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்தனர். பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் செங்கோலை பரிசாக வழங்கினார்கள்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நான் உங்களிடம் தமிழில் பேசாமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கிறேன்.
வர இருக்கிற தமிழ் புத்தாண்டு தினத்திற்கு எனது வாழ்த்துகளை உங்கள் அத்தனை பேருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டு நமது அனைவருக்கும் வளர்ச்சி மிகுந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.
உங்களுடைய அன்பு, ஆசீர்வாதம் எனக்கு தெரிகிறது. எனவே தமிழக மக்களின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து எனது முழு திறமையையும் வெளிபடுத்துவேன். வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தம் படைக்கப் போவதை டெல்லி உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர்.
இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்ததை போல் மீண்டும் ஒரு வரலாறு நிகழ உள்ளது. வீரம் நிறைந்த வேலூரில் இறைவன் ஜலகண்டேஸ்வரரர், கடவுள் முருகப் பெருமானை தாழ்பணிந்து வணங்குகிறேன்.
2014-ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை. எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.
21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். உலக அரங்கில் இந்தியா இன்று வலிமையான நாடாக பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது.
இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். அதற்காக தமிழகம் கடுமையாக உழைக்கிறது.
வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு உதான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும். சென்னை, பெங்களூரு தொழில் துறை வழித்தடம் வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால் வேலூர் வளர்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. பெரும் தடையாக இருக்கிறது. அனைத்திலும் தி.மு.க. அரசியல் செய்கிறது.
தி.மு.க. ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. கொள்ளையடிப்பதிலும், ஊழலுக்கும் தி.மு.க. காப்பிரைட் வைத்துள்ளது.
மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை தி.மு.க. ஊழல் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த அதிகார மையமாக தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. பழைய சிந்தனையிலேயே உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
- அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிறார்.
நெல்லை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதனை ஒட்டி தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மாவட்டம் தோறும் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் தமிழகத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. வருகிறார். அவர் அன்றைய தினம் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பிரசாரத்தின் போது நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.
இதனையொட்டி நெல்லை மாநகர் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 13-ந்தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் நெல்லை மாநகர பகுதி முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள்.
- பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மாவடப்பு, குழிப்பட்டி குருமலை, மேல்குருமலை, பொறுப்பாறு, தளிஞ்சி, தளிஞ்சு வயல், ஆட்டுமலை, கோடந்தூர் உள்ளிட்ட குடியிருப்புகளில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இவர்கள் பாதை வசதியை அமைத்து தரக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். அதைத்தொடர்ந்து திருமூர்த்தி மலையிலிருந்து குருமலை வரை உடுமலை வனச்சரகத்தில் சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான பணி தொடங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனால் மலைவாழ் மக்கள் அவசர கால தேவையை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தநிலையில் குழிப்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகம்மாள் (வயது 22) என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மலைவாழ் மக்கள் அவரை தொட்டில் கட்டி சுமார் 7 கிலோமீட்டர் சுமந்து வந்து எரிசனம்பட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு நாகம்மாளுக்கு குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி நாகம்மாளை தூக்கி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்துள்ளார். இல்லையென்றால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டி ருக்கும்.
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
பாதை வசதி கேட்டு நீண்ட நாட்களாக போராடி வருகின்றோம்.ஆனால் அதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட பாதை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் பிரசவம், விபத்து, அவசரகால சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த 8 ஆண்டுக்கு முன்பு பிரசவத்திற்காக கொண்டுவரப்பட்ட போது தாயும் சேயும் இறந்து போன சோக சம்பவம் நடந்துவிட்டது.
எனவே எந்த அரசியல் கட்சியினரும் வாக்குகள் சேகரிக்க குருமலை, குழிப்பட்டி, மாவடப்புக்கு வர வேண்டாம். முறைப்படி பாதை அமைத்துக் கொடுத்து விட்டு வாக்கு சேகரிக்க வாருங்கள். இல்லையென்றால் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்க மாட்டோம்.மேலும் நாங்கள் வாக்களிப்பை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமராவதி வனச்சரக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 3200 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கோடந்தூர், மாவடப்பு, தளிஞ்சி உள்ளிட்ட பகுதி களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. தேர்தலின் போது பிரசாரத்திற்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகளுக்கு வரும் அதிகாரிகளிடம் அப்பகுதி பொது மக்கள் தங்களது கோரிக்கை களை எடுத்து சொல்லலாம் என காத்திருந்தனர்.
தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னும் பிரசாரத்திற்கு அரசியல் கட்சியினர் யாரும் செல்லவில்லை. மேலும் தேர்தல் அதிகாரிகளும் வாக்குப்பதிவு ஆய்வுக்கு செல்லவில்லை. இதனால் மலைவாழ் பகுதியில் தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகளே இல்லாமல் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.






