search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை: பிரதமர் மோடி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை: பிரதமர் மோடி

    • கொங்கு, நீலகிரி எப்போதுமே பா.ஜனதாவுக்கு சிறப்பான இடம்.
    • இந்த பகுதியில் இருந்துதான் வாஜ்பாய் காலத்தில் எம்.பி.யை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள்.

    பிரதமர் மோடி இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    * என் அன்பார்ந்த தமிழக சகோதர, சகோதரிகளே வணக்கம்.

    * கோவை கோணியம்மன், மருதமலை முருகனுக்கு என் வணக்கம்.

    * அழகான தேயிலை தோட்டங்கள் இருக்கும் பகுதிக்கு வருவதற்கு ஒரு டீக்கடைகாரருக்கு சந்தோசமாக இருக்காதா என்ன?.

    * அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    * கொங்கு, நீலகிரி எப்போதுமே பா.ஜனதாவுக்கு சிறப்பான இடம். இந்த பகுதியில் இருந்துதான் வாஜ்பாய் காலத்தில் எம்.பி.யை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள்.

    * தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பா.ஜனதா ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது.

    * தமிழகம் முழுவதும் சொல்கிறது மீண்டும் ஒருமுறை மோடியின் ஆட்சி.

    * எங்களுடைய அரசு 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது.

    * ஏதாவது பொய்களை சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே காங்கிரஸ், திமுக-வின் நோக்கம்.

    * திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை.

    * இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் எஸ்.சி., எஸ்டி, ஓபிசி மக்களுக்கு வீடு, மின்சாரம் கிடைக்கக் கூடாது என நினைத்தது. ஆனால் எங்களுடைய ஆட்சியில் வீடுகள் கட்டிக் கொடுத்தோம். குடிநீர் வழங்கினோம். மின்சாரம் வழங்கினோம்.

    * குடும்ப அரசியல் நடத்தும் இந்த கட்சிகள் தலித் மக்கள் பதவிக்கு வரக் கூடாது என நினைத்தார்கள். நாங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவரை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தோம். அதையும் அவர்கள் எதிர்த்தார்கள்.

    * இந்திய கூட்டணி இந்தியாவின் திறமையை நம்பவில்லை. கொரோனா தடுப்பூசி தயாரிப்போம் என்றபோது எள்ளி நகையாடினார்கள். ஆனால் தடுப்பூசி தயாரித்து சவால் விடுத்தோம். எதை முடியாது என்றார்களோ, அதை செய்து காட்டினோம்.

    Next Story
    ×