என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.
    • நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடைபெறுவதை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திருவாமாத்தூர் கிராமத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து முதல்வர் செய்து வருகிறார்.

    தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல பெட்ரோல், பால் விலையை குறைத்தார்.

    பெண்களுக்கான விடியல் பணயத்திட்டத்தில் 500 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விடியல் பயணத்திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத்திட்டத்தால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

    31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    1.16 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    விக்கிரவாண்டிக்கான திட்டங்கள் தேர்தலுக்குப்பின் செயல்படுத்தப்படும். விக்கிரவாண்டியில் பாலம், சாலை உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்படும்.

    நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விக்கிரவாண்டியில் ரூ.75 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படும்.

    அன்னியூர் சிவாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல்.
    • பெரம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளது.

    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று காலை 9 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருமுறை வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

    அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம். கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை. நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை. பெரம்பூரில் அரசு அனுமதியுடன் நினைவிடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

    அதன்படி, பௌத்த முறைப்படி இறுதிச் சடங்கு முடிந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடல் இறுதி ஊர்வலமாக பொத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    பெரம்பூரில் இருந்து மூலக்கடை, மாதவரம் ரவுண்டானா வழியாக இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது.

    இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். பெரம்பூரில் இருந்து 21 கி.மீ., தொலைவில் பொத்தூர் அமைந்துள்ளது.

    அடக்கம் செய்யும் இடத்தில் ஆவடி கூடுதல் ஆணையர் தலைமையில் 300 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய சேப்பாக் அணி 166 ரன்களை எடுத்துள்ளது.

    சேலம்:

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 58 ரன்கள் எடுத்த நிலையில், சந்தோஷ் குமார் 41 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெகதீசன் அரை சதம் கடந்தார். பாபா அபராஜித் 24 ரன்னும், சித்தார்த் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.

    நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறஙகுகிறது.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை.
    • ஆவணங்கள் சிலவற்றை எடுத்துக் சென்றுள்ளதாக தகவல்.

    கரூரில் முன்னாள் :அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 7 இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவு பெற்றுள்ளது.

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சுமார் 8 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனையிட்டனர்.

    எம்.ஆர்.வி ட்ரஸ்ட் அலுவலகம், நூல் குடோன் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆவணங்கள் சிலவற்றை எடுத்துக் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எம்.ஆர்.வி. ட்ரஸ்ட், சாயப்பட்டறை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவுபெற்றுள்ளது.

    • சேலத்தில் ஜூலை 11ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
    • இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலம்:

    டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலத்தில் ஜூலை 11-ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை.
    • நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை.

    சென்னை:

    கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடர்ந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன் இன்று காலை 9 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இருமுறை வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின்னர் பிற்பகல் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

    அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உடலை அடக்கம் செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம். பெரம்பூர் கட்சி இடத்தில் நினைவிடம் அமைத்துக்கொள்ளலாம். கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய கூடாது என்பது தான் பிரச்சனை, நினைவு மண்டபம் கட்ட பிரச்சனை இல்லை. பெரம்பூரில் அரசு அனுமதியுடன் நினைவிடம் கட்டிக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை ஆவடி அடுத்த பொத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

    இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் பொத்தூர் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ்க்கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும் பழனிக்கு வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனத்திற்காக பழனிக்கு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் மற்றும் முகூர்த்தநாள் என்பதால் பழனி அடிவார பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் பல்வேறு விஷேசங்கள் நடைபெற்றது.

    மேலும் பஸ்நிலையம், அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின்இழுவை நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மலைக்கோவிலில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முகூர்த்த நாள் என்பதால் அடிவாரம் திருமண மண்டபங்களில் நடைபெற்ற விஷேசசத்திற்கு ஏராளமான வாகனங்கள் வந்தன.

    மேலும் பக்தர்களின் வாகனங்களும் அதிகரித்ததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.
    • சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?

    சென்னை:

    பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின், பேசிய சீமான் கூறியதாவது:-

    * இப்படி ஒரு சூழல் வரும்என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

    * தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள் நடைபெற்றுள்ளன.

    * ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது.

    * சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாநிலத் தலைவரை தலைநகரிலேயே கொல்ல முடியும் என்றால் கிராமத்தில் இருப்பவர்களின் நிலையை யோசிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றார்.

    • மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக 2 நாட்கள் மின்தடை.
    • 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை அம்பத்தூர் ஜெ.ஜெ.நகர் தொழிற்பேட்டை, முகப்பேர் கிழக்கு, எழும்பூர், கொத்தவால் சாவடி, மண்ணடி, என்.எஸ்.சி. போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலை, போரூர் பி.டி.நகர் மெயின் ரோடு, வியாசர்பாடி வி.எஸ்.மணி நகர், கிண்டி ராம்நகர், ஆவடி லட்சுமிபுரம், பல்லாவரம் நாகல்கேணி, ஆழ்வார்திருநகர், சிறுசேரி ஆகிய பகுதிகளில் நாளை (8-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம், கொரட்டூர், பாடி, கொடுங்கையூர், வளசரவாக்கம், கிண்டி சாந்திநகர், திருமுல்லைவாயல், அலமாதி, எடப்பாளையம், சி.டி.எச். சாலை, சோழவரம், சிறுனியம், சோத்துப்பெரும்பேடு, கோவில்பதாகை, பாண்டேஸ்வரம், புழல், பல்லாவரம் ஜெயின், மதுரவாயல் ஆலப்பாக்கம், போரூர், கோவூர், கொட்டிவாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகளில் வருகிற 9-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 11-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி, மதம், இனம் எதுவுமே கிடையாது.
    • எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்த மனிதரை நாங்கள் இழந்துள்ளோம்.

    படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நடிகர் சாய் தீனா இன்று அஞ்சலி செலுத்தினார்.

    அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்கள் பூர்வகுடி மக்களின் எழுச்சி நாயகன் எங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். இது எங்களுக்கு ஈடுசெய்யமுடியாத மிகப்பெரிய இழப்பு. எங்கள் அண்ணன் இருந்தபோது எங்களுக்கு எல்லாமே இருந்தது. இப்போது எங்களின் மொத்த அதிகாரமும் போய்விட்டது. எங்கள் அண்ணனை இழந்த பிறகு மீண்டும் 100 வருடம் பின்னாடி போனது போல எங்களுக்கு பயம் வந்துள்ளது.

    நாங்கள் அம்பேத்கரின் பிள்ளைகள். எங்களுக்கு ஜாதி, மதம், இனம் எதுவுமே கிடையாது. எங்களுக்கு மனிதநேயம் மட்டும்தான் உள்ளது. எங்கள் முன்னாடி யார் இருந்தாலும் அவர்களை மனிதர்களாக மட்டும் தான் பார்ப்போம். எந்த அடையாளமும் இல்லாத மனிதர்களாக வாழ ஆசைப்படும் மக்கள் நாங்கள். இது அம்பேத்கர் சொன்ன வார்த்தை.

    எங்களுக்கு சாதி, மத, இனம், பேதம் எதுவுமே கிடையாது. எல்லா மனிதர்களையும் நேசிப்பவர்கள் நாங்கள். எங்களுக்கு சாதியில்லை. எங்களை பார்ப்பவர்கள் தான் சாதியாக அடையாளப்படுகிறார்கள். இங்கிருந்த எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்த மனிதரை நாங்கள் இழந்துள்ளோம்" என்று உருக்கமாக தெரிவித்தார்.

    • அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை அன்னை நகரை சேர்ந்தவர் ஜெயா (60). இவரது கணவர் அண்ணாதுரை (70). இவர் பாத்திரம் அடைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயா தங்கை மகள் பூங்கொடி தங்கள் தெருவில் உள்ள பைப்பிற்கு தண்ணீர் பிடிக்க சென்ற போது, அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் டப்பாவுடன் கூடிய பிராந்தி பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.

    அதனை பூங்கொடி எடுத்து வந்து பெரியப்பா அண்ணாதுரையிடம் கொடுத்ததாகவும் அதை வாங்கி கொண்டு அண்ணாதுரை சென்று விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து அண்ணாதுரை தனது வீட்டு மாட்டு கொட்டகையில் வந்து உட்கார்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

    உடனே அண்ணாதுரை குடும்பத்தினர் என்னவென்று சென்று பார்த்த போது அண்ணாதுரை இடுப்பில் மது பாட்டில் பாதி குடித்துவிட்டு வைத்திருந்து உள்ளார். அதை எடுத்து பார்த்த போது அது ஊதா நிறத்தில் இருந்து உள்ளது.

    உடனே அண்ணாதுரை மகன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாதுரையை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக அறிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஜெயா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கீழே கிடந்த மது பாட்டிலில் விஷம் கலந்து இருந்ததா? அல்லது அவரின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×