என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் சுவட்டர் மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் வனப்பகுதிகளும் பச்சை போர்வை போர்த்தியது போல் பசுமையாக கண்களுக்கு விருந்தளிக்கிறது. தற்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு விடுமுறை இல்லாததால் சுற்றுலா பயணிகள் இன்றி ஏற்காடு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக நாள் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் தொடர்ந்து கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது.

மலைப்பாதைகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் பகல் நேரங்களிலேயே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கின்றனர். குறிப்பாக நேற்று மாலை முதல் கடுமையாக குளிரும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இன்று காலையும் பனிமூட்டத்துடன் சாரல்மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சுவட்டர் மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர். பனிமூட்டம், சாரல் மழை, கடுங்குளிர் நிலவி வருவதால் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டமின்றி ஏற்காடு நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- 4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
- சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போலீசார், படுகொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்களே ஆகும் நிலையில், மதுரையில் அமைச்சர் வீட்டருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
- பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, கடந்த 2022 ஆம் ஆண்டு 30 சதவிகிதமும், 2023 ஆம் ஆண்டு 2.18 சதவிகிதமும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது நடப்பாண்டில் மீண்டும் 4.83 சதவிகிதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போதே மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான செய்திகளை மறுத்த திமுக அரசு, தேர்தலுக்கு பின்பு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 221-வதாக இடம்பெற்றிருக்கும் மாதம் தோறும் மின் கணக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பு, ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கும் ஏழை, எளிய மக்களுக்கு மீளவே முடியாத அளவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.
மின்சார நிலைக்கட்டணம் மற்றும் உச்ச நேர மின் கட்டண உயர்வால் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணத்தால் மேலும் பல நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக தொழில் கூட்டமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வை இருளில் மூழ்கச் செய்ததாக பழனிசாமி அரசாங்கத்தை விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பின் அதே தவறை வருடந்தோறும் இழைத்து வருவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
எனவே, மின் நுகர்வோர்களுக்கு கடுமையான நிதிச்சுமையை ஏற்படுத்தும் மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மின்வாரியம் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
- சொன்னதை செய்யாமல்.... சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல்....
- விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் விடியா திராவிட மாடல்...
சென்னை:
தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா?
அடுக்குமாடி குடியிருப்பு முதல் ஏழை எளிய மக்கள் வரை வாக்களித்தவர்களுக்கும், வாக்கு அளிக்காதவர்களுக்கும் பரிசா இந்த மின் கட்டண உயர்வு...
சொன்னதை செய்யாமல்.... சொல்லாத மின் கட்டண உயர்வை வாக்களித்த மக்களுக்கு பரிசளித்ததுதான் திராவிட மாடல்....
விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் விடியா திராவிட மாடல்...
ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும்... என கூறியுள்ளார்.
- தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
- நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் பணிமனையில் வருகிற 23-ம் தேதி முதல் ஆகஸ்டு 14-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20691) வருகிற 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20692) வருகிற 22-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22153) 23-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரை, அரக்கோணம், செங்கல்பட்டு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12653) 24-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 1-ம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும். ஐதராபாத்தில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12760) 22-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரை சென்றடையும். அதேபோல, தாம்பரத்தில் இருந்து ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12759) 22-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20684) 22, 24, 26, 27, 29, 31 ஆகிய தேதியில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் இந்த ரெயில் விழுப்புரம்-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (20683) 24, 25, 28, 30 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12635) 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை செங்கல்பட்டில் இருந்து புறப்படும். மேலும் இந்த ரெயில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12606) 23-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். மேலும் இந்த ரெயில் செங்கல்பட்டு-சென்னை எழும்பூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையிலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் மாவட்டம் முழுவதும் விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறியுள்ளார்.
- சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்.
- சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது பொது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், மின் கட்டண உயர்வுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு என் கடும் கண்டனம் !
பாராளுமன்றத் தேர்தலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் ஓயட்டும் என்று காத்திருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக முதல்வர்.
மக்களின் வயிற்றில் அடிப்பதில் என்ன இன்பமோ இந்த விடியா அரசுக்கு?
"சொன்னதையும் செய்வேன்- சொல்லாததையும் செய்வேன்" என்று மேடைதோறும் வாய் கிழியப் பேசிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்களே- மாதம் ஒருமுறை மின் கட்டணம் உள்ளிட்ட சொன்ன வாக்குறுதி எதையும் செய்த பாடில்லை; சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் செய்துகொண்டே இருக்கிறீர்கள்!
உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்!
மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது, மின்சாரத்தை தடையின்றி வழங்கும் அடிப்படை திறனின்றி, மின் கட்டணத்தை மட்டும் மீண்டும் மீண்டும் உயர்த்தும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மக்களை பெரும் சுமைக்கு ஆளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.
- வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்வு.
தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட் பயன்பாட்டாளர்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மின் கட்டணம் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதேபோல், வணிக பயன்பாட்டிற்கு 50 கிலோ வாட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்கட்டண உயர்வால் தமிழக மக்கள் மிகவும் சிரமப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், " 24 மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது.
இப்போது மின்சார கட்டணத்தை உயர்த்திய அரசு அடுத்து பேருந்து கட்டணத்தை உயர்த்தும்" என்றார்.
இதேபோல், மின்கட்டணத்தை அரசு உயர்த்தியது கண்டனத்திற்குரியது என பாமக வழங்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறத்து மேலும் அவுர், " விக்கிரவாண்டி தேர்தலுக்கு பிறகு மின் கட்டணத்தை அரசு உயர்த்தும் என முன்பே நாங்கள் கூறி வந்தோம்.
இந்த மின் கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, மின்கட்டண உயர்வு என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "மின் கட்டண உயர்வால் திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை உணர முடிகிறது" என்றார்.
- 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 6.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 6.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- 501 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 8.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 8.55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்ததற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 400 யூனிட் வரை 4.60 ரூபாய் பெறப்பட்டு வந்தது. தற்போது 4.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 6.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 6.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
501 முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 8.15 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 8.55 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 9.20 ரூபாய் பெறப்பட்டது. தற்போது 9.65 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
801 முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 10.20 ரூபாய் பெறப்பட்டது. இருந்து 10.75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
1000 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 11.80 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.
- அப்பெயர்களிலுள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும் அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன. தங்களுடைய சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதுகின்ற சாதிகள் அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.
மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளைச் செய்கின்ற சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச் சுவைக் காட்சிகளிலும், திரைப்படப் பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.
இது. அப்பெயர்களிலுள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும். தவிர இது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொதுச் சமூகத்தில் இல்லை என்று கூறியுள்ளது.
- தேர்தல் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.
- திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தல் முடிவில், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.
திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு 56,296 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் அபிநயாவுக்கு 10,602 ஓட்டுகளும் கிடைத்தன.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவாவிற்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவின் வெளிப்பாடாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.கழகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
கழகத்தின் வேட்பாளராக களமிறங்கி இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள அண்ணன்
அன்னியூர் சிவா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
சட்டமன்ற உறுப்பினராக அவரது மக்கள் பணி சிறக்கட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
- ரவுடிகள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும்.
சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் பொறுப்பேற்றுக் கொண்டார். ரவுடிகளை ஒழிக்க ரவுடிகளின் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் காவல் ஆணையர் அருண் காவல் துறையினருக்கு உத்தரவு ஒன்றை விடுத்துள்ளார் அதில்,
• சென்னை காவல் ஆய்வாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
• குறைந்தபட்சம் தினமும் இரண்டு ரவுடிகள் என்ற அடிப்படையில், ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே காவல்துறையினர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.
• தற்போது சரித்திரப் பதிவேட்டில் இருக்கும் ரவுடிகளை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல், ரவுடிகளின் உறவினர்களுக்கு அறிவுரை தர வேண்டும்.
• ரவுடிகள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை நேரடியாக கண்காணிக்க வேண்டும்.
• நிபந்தனை ஜாமினில் இருக்கும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், நிபந்தனைகளை மீறி செயல்பட்டாலோ, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தாலோ அவர்களின் ஜாமின் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல் ஆய்வாளர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.






