என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரை: அமைச்சர் வீட்டருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை
    X

    மதுரை: அமைச்சர் வீட்டருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

    • 4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
    • சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மதுரையில் நடைபயிற்சி சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பாலசுப்பிரமணியனை ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போலீசார், படுகொலை செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    சென்னையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு 10 நாட்களே ஆகும் நிலையில், மதுரையில் அமைச்சர் வீட்டருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×