என் மலர்
உள்ளூர் செய்திகள்
- குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?
- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன்.
இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?
அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசு தவறு செய்து விட்டது என்று குற்றம் சாட்டினால் எச்சரிக்கை செய்து விட்டதாக கூறியுள்ளது.
- மானாமதுரையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பணியாற்றிய டாக்டர்களை பாராட்டுகிறேன்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் தி.மு.க. அரசு தோல்வி கண்டுள்ளது. மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட பாதிப்பை விட தி.மு.க. அரசின் அலட்சியத்தால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் வரும் முன் காப்போம் என்ற திறன் இல்லை.
நவம்பர் 30-ந் தேதியே 117 அடிக்கு மேல் சாத்தனூர் அணை கிட்டதட்ட நிரம்பியது. மத்திய நீர்வள ஆணையம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி அணையை திறந்துவிட மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. இதை செயல்படுத்தாமல் இந்த அரசு உறங்கிவிட்டது.
அரசு தவறு செய்து விட்டது என்று குற்றம் சாட்டினால் எச்சரிக்கை செய்து விட்டதாக கூறியுள்ளது. நள்ளிரவில் விடப்பட்ட எச்சரிக்கை மக்களை சென்றடையவில்லை. இதனால் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டு இருக்காது.
மழை பாதிப்புகளை சரி செய்வதில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்து விட்டது. தமிழக மக்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
கடந்த 30 ஆண்டுகளில் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற அறிக்கையை பா.ம.க. ஆதரிக்கிறது. இதை வலியுறுத்தி திருவண்ணாமலையில் வருகிற 21-ந் தேதி உழவர் பேரியக்க மாநாடு நடைபெற உள்ளது.
டெல்லியில் சமூகநீதி மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியிறுத்தியுள்ளார். இதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம். இதை ஏன் மாநில அரசு செயல்படுத்த தயங்குகிறது என்பதே வினா.
கடை வாடகைக்கு 18 சதவீத விதிக்கப்படும் என ஜி.எஸ்.டி. கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வணிகர்கள் போராட்டம் நடத்தியும் மத்திய அரசு திரும்ப பெற மறுக்கிறது. இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அகரம்பள்ளிப்பட்டியில் ரூ.16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அண்மையில் திறக்கப்பட்ட பாலம் வெள்ளத்தின் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டதை ஏற்க முடியாது. இதற்கான காரணம் அறிய விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும். இதனால் 88 ஆயிரம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அகவிலைப்படி வழங்க உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இது தொழிலாளர் விரோத போக்கு. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பலவழிகள் உள்ளது.
பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது. மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் அறிவித்த சிங்கார சென்னை வளர்ச்சியை சில ஆண்டுகளில் நாம் வானத்தை நோக்கி பார்க்கப்போகிறோம்.
மானாமதுரையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பணியாற்றிய டாக்டர்களை பாராட்டுகிறேன். நோயாளிகளிடம் டாக்டர்கள் கனிவாக பேசினால் பாதி நோய் போய்விடும். நான் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றியபோது மக்கள் எனக்கு கொடுக்கப்பட்ட பட்டம், சின்ன டாக்டர் என்பார்கள். காலை 7.30 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு சென்று பிற்பகல் 2 மணிக்கு மேல் திரும்புவேன். என்னை பார்க்க நோயாளிகள் நீண்ட வரிசையில் நிற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
- பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் துவாரகாபுரி கிராமத்தில் மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட நிருபவர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், புயல் காரணமாக 3 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு வேளாண் பயிர் நீரால் முழுங்கி நாசமாகி உள்ளது. வேளான் துறை அதிகாரிகள் பாதிப்பு குறித்து நேரடியாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விலை நிலத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இழப்பீடு குறித்து முதலமைச்சர் அறிவித்து உள்ளார். கணக்கெடுப்பு பணி முடிந்த பிறகு இழப்பீடு வழங்கப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது. அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. நீர்வழி ஆக்கிரமிப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அண்ணாந்து பார்த்து துப்பிக்கொள்வது போலாகும். வெள்ள பாதிப்பு குறித்து குற்றம் சாட்டினால் அந்த பாதிப்புக்கு முழு பொறுப்பு அவர்கள் தான். காரணம் 10 ஆண்டுகள் அவர்கள் தான் ஆட்சியில் இருந்தனர். தற்போது நீதிமன்றம் நடவடிக்கை அடிப்படையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு வந்து உள்ளது. அவர்கள் நேரடியாக பார்வையிட்ட பின் பாதிப்பு குறித்து கூறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது.
- அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.
ஆலந்தூர்:
மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு நேற்று காலை பயணிகள் விமானம் வந்தது. பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் சுற்றுலாப் பயணிகளாக, மலேசியா சென்று விட்டு வந்தது தெரிந்தது. அவர்கள் கொண்டு வந்த பெரிய அட்டை பெட்டியை சோதனை செய்தபோது அதில் அரியவகை சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமானவை உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்கள் நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து மொத்தம் 5,400 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த வகை சிவப்புக் காது அலங்கார நட்சத்திர ஆமைகள் தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் அதற்கான செலவுகளை கடத்தலில் ஈடுபட்ட 2 பயணிகளிடமும் வசூலிக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற பயணிகள் விமானத்தில், 5,400 நட்சத்திர ஆமைகளும் மலேசிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆமை கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ் ஆகாஷ் , தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
- பல்லாவரம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி, மோகனரங்கன் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்த நிலையில் பல்லாவரம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
- முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு.
பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) வருவதையொட்டி ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் இப்போதே அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரசு விரைவு பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இருந்த போதிலும் பஸ்களில் முன்பதிவு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாதம் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்றும் குறைந்தப லட்சம் 1½ லட்சம் பேர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிவகாமி, கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
- வழக்கில் தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவாங்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் (33). கார் டிரைவர். இவரது மனைவி சிவகாமிஸ்ரீ. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் சிவகாமி, கணவரிடம் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். ஆனால் ராமகிருஷ்ணன் மனைவியை பிரிய மனம் இல்லாததால் விவகா ரத்திற்கு சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 28-ந்தேதி ராமகிருஷ்ணன் சென்னைக்கு சவாரி வந்தார். அப்போது அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மனைவி சிவகாமிஸ்ரீ பேச வேண்டும் என்று கூறி சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை கணேஷ் நகருக்கு வருமாறு அழைத்தார்.
ராமகிருஷ்ணன் அங்கு சென்ற போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் தலை, கையில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த ராமகிருஷ்ணன் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் விவாகரத்து கொடுக்க மறுத்ததால் கணவரை மனைவி சிவகாமிஸ்ரீயே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து சிவகாமி ஸ்ரீ, மதுரவாயல் ஏரிக்கரையைச் சேர்ந்த நவீன், மதுரவாயல் கிருஷ்ணா நகரை சேர்ந்த கெல்வின் ராஜ், அரும்பாக்கத்தை சேர்ந்த நித்திஷ் ராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- மும்பையில் அம்பேத்கரின் நினைவிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
- 350 அடி உயரத்தில் அவரது வெண்கலச் சிலை நிறுவப்படுகிறது.
சென்னை:
அம்பேத்கர் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுவதை யொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மும்பையில் உள்ள சைத்யபூமி எனும் சட்ட மேதை அம்பேத்கரின் நினைவிடம் பல ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு 350 அடி உயரத்தில் அவரது வெண்கலச் சிலை நிறுவப்படுகிறது.
இத்துடன் அவரது பெருவாழ்வை விவரிக்கும் கண்காட்சியகம், ஆராய்ச்சி மாணவர்களுக்கான நூலகம், கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தொழில்நுட்ப ஆய்வகம் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் திறந்து வைக்க உள்ளார்.
அரசமைப்பு சட்டம் மற்றும் 'புத்தமும் அவரது தம்மமும்' என்ற நூல் ஆகிய இரண்டும் அம்பேத்கர் எனும் பேராற்றலின் பெருங்கொடைகள். இவை தீயவற்றை எரிக்கும் தூயவை. ஜனநாயக அறத்தை காக்கும் பேரரண். இந்த இரண்டையும் குறிவைத்துள்ள சனாதனத்தை அடையாளம் கண்டு, அதை முறியடிக்க அவரது நினைவு தினத்தில் உறுதியேற்போம். அவரது ஞான பேராயுதங்களை ஏந்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் தற்போது தான் வடியத் தொடங்கி உள்ளது.
- ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழைக்கு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் தற்போது தான் வடியத் தொடங்கி உள்ளது. இதனிடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் வெள்ள சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கி உள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க தனது ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
திருவள்ளூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் வழியாக வரும் கல்லாற்று தண்ணீர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்து கேசாவரம் அணைக்கட்டு பகுதிக்கு வரும். பின்னர் அங்கிருந்து கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என 2 ஆறுகளாக பிரிகிறது.
கேசவரம் அணைக்கட்டு நிரம்பினால், நேரடியாக கொசஸ்தலை ஆற்றில் செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்லும். இதேபோல் அணைக்கட்டின் மற்றொரு புறம் அமைக்கப்பட்ட, 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் மழைநீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக சென்னை நேப்பியார் பாலம் அருகே சென்று கடலில் கலக்கும்.
இந்த நிலையில் ஃபெஞ்ஜல் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக கேசவபுரம் அணைக்கட்டு முழுவதும் நிரம்பி வழிகிறது. அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதையடுத்து 1000 கன அடி நீர் கேசவபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறி வருகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
பாகசாலை, மணவூர், விடையூர், நாத்தவாடா, நாராயணபுரம் ஆகிய பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
இதேபோல் கூவம் ஆற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பேரம்பாக்கம் பிஞ்சிவாக்கம், ஏகாட்டூர், புட்லூர் ஆகிய பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி காணப்படுகிறது. கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுச்சத்திரம் தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் செல்கிறது. புதுச்சத்திரம் தரைப்பாலம் மூழ்கினால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும்.
- குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று.
- 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதவில் அறிக்கை வெளியிட்டுளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை.
புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும்.
மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தக்க சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்து, தமிழ்நாடு முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு முக ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காலநிலை மாற்றத்திற்கு குழு அமைத்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது.
- கடல் அரிப்பை பாதுகாக்க அலையாற்றி காடுகள் உருவாக்கப்படுகின்றன.
சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக்குழுவின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* காலநிலை மாற்றத்திற்கு குழு அமைத்து இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது.
* மனித குலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது.
* நீண்ட கடற்கரையை பாதுகாக்க நெய்தல் மீட்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
* கடல் அரிப்பை பாதுகாக்க அலையாற்றி காடுகள் உருவாக்கப்படுகின்றன.
* பொருளாதார மீட்சியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் இரு கண்களாக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.






