என் மலர்
நீங்கள் தேடியது "முன்பதிவு டிக்கெட்"
- அக்டோபர் 17-க்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைன், ஆஃப்லைன் வழியே 8 மணிக்கு தொடங்கியது.
- முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்தன
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பங்களுடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
அக்டோபர் 20ம் தேதி திங்களன்று தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், 17ம் தேதிக்கான (வெள்ளி) முன்பதிவு இன்று ஆன்லைன், ஆஃப்லைன் வழியே 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்தன.
- சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
- இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெறுகிறது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பங்களுடன் கொண்டாட விரும்பும் வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில், பேருந்துகளில் செல்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகளும், ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், அக்டோபர் 16-ந்தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இணையதளம் மற்றும் ரெயில் நிலைய முன்பதிவு மையங்களில் இன்று காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரெயில்களில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது.
அக்டோபர் 19-ந்தேதிக்கான ரெயில் முன்பதிவு வருகிற புதன்கிழமையும், தீபாவாளி நாளான அக்டோபர் 20-ந்தேதிக்கான முன்பதிவு வருகிற வியாழக்கிழமையும் தொடங்க உள்ளது.
- புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கிய பயனர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
- இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.
முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பான புகார்கள் அவ்வப்போது வந்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு ரெயில் பெட்டிகள், ரெயில் ஓட்டுநர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களின் பற்றாக்குறை காரணமாக கூடுதலாக பெட்டிகளை அல்லது கூடுதலாக ரெயில்களை இயக்குவது என்பது ரெயில்வேயால் இயலாததாக மாறி உள்ளது.
இந்த நிலையில், ஸ்லீப்பர் பெட்டியில் அதற்குரிய டிக்கெட் எடுக்காமல் நிறைய பேர் பயணம் செய்த புகைப்படத்தை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இப்புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கிய பயனர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
இது ரெயில்வே அமைச்சகத்தின் ரெயில்வே சேவா சமூக ஊடகக் கணக்கின் கவனத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து, ரெயில் சேவா தனது சமூக வலைத்தள பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், "இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். உங்கள் விவரங்களை நாங்கள் கேட்கிறோம்... DM மூலம்... விரைவான தீர்வுக்காக 139 என்ற எண்ணை டயல் செய்யலாம்" என்று கூறியுள்ளது.
- சனிப்பெயர்ச்சி விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
- மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
காரைக்கால்:
புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.
2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இந்தாண்டு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் ரூ.1,000, ரூ.600 மற்றும் ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500, சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருநள்ளாறுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காரைக்கால் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், சந்தைதிடல், பஜன்கோ வேளாண் கல்லூரி, செல்லூர் வி.ஐ.பி. நகர், அத்திப்படுகை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ஆட்டோ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறுக்கு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு புதுவை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து செல்லும் வகையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேலும் பக்தர்கள் புனித நீராடும் நளன் குளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோவில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு.
பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) வருவதையொட்டி ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் இப்போதே அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அரசு விரைவு பஸ்களில் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி 11, 12, 13 தேதிகளில் சிறப்பு பஸ்கள் விடுவதற்கு அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இருந்த போதிலும் பஸ்களில் முன்பதிவு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.
ஜனவரி மாதம் பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும் என்றும் குறைந்தப லட்சம் 1½ லட்சம் பேர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.






