என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • ஓடும் காரில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.
    • சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பஞ்சாப் மாநிலம் மொகாலி ஜிராஜ்பூரில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 16 வயது சிறுமி வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் வேலை முடிந்து சண்டிகர்- அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால் அருகே ஆட்டோவுக்காக காத்து இருந்தார்.

    அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர். பின்னர் ஓடும் காரில் மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்தனர்.

    பின்னர், சண்டிகரில் உள்ள ஒரு ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் கடத்தப்பட்ட இடத்திலேயே அந்த சிறுமியை விட்டு சென்றனர்.

    இது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    • குழந்தைகளை மீட்க உதவிய வாலிபர்களுக்கு மல்லேயன் கிராம பஞ்சாயத்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் மற்றவர்களிடம் அதிகம் நட்பு பாராமல் இருக்கும் படியான நிலை தான் உள்ளது. மேலும் மற்றவர்களுக்கும் உதவுவதும் முந்தைய காலங்கள் போல் அல்லாமல் அரிய நிகழ்வாகவே நடைபெறுகிறது. மற்றவர்களுக்கு உதவினால் தங்களுக்கு எதாவது பிரச்சனை ஏற்படுமோ என்கிற அச்சமும் பலரிடமும் நிலவுகிறது.

    இருப்பினும் மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மற்றவர்களுக்கு உதவ ஓடோடி வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மனிநேயமிக்க செயலில் வாலிபர்கள் ஈடுபட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோகாவில் மல்லேயன் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 35 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், சுக்பிந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங் ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்கள் உதவியுடன் மாணவர்களை மீட்டனர்.

    ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு மாணவர்கள் செல்ல வேண்டிய பாதை வெள்ளத்தால் சேதமடைந்த நிலையில், சுக்பிந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங் ஆகிய இருவரும் பாலங்கள் போல் குனிந்து அவர்களுக்கு பாதை அமைத்து கொடுத்தனர். இதனால் 35 மாணவர்கள் அவர்கள் மீது ஏறி மற்றொரு முனைக்கு வந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இதனை தொடர்ந்து குழந்தைகளை மீட்க உதவிய வாலிபர்களுக்கு மல்லேயன் கிராம பஞ்சாயத்து கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. 



    • அமிர்தசரஸில் உள்ள மோதே எல்லையில் 5 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
    • ஒரு கிலோ ஹெராயின் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 டிரோன்களை இடைமறித்து எல்லை பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தினர். அமிர்தசரஸில் உள்ள மோதே கிராமத்தில் ஐந்து டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

    அட்டாரி கிராமத்தில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் துப்பாக்கிகள், குண்டுகளை நிரப்பும் மூன்று மெகஜின்ஸ் (magazines), 1.070 கி.கி. ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

    • பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது.
    • சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.

    ஆபரேஷன் சிந்தூரின்போது தாரா வாலி என்ற கிராமம் அருகே சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு குடிநீர், ஐஸ்கிரீம், பால், லெஸ்சி போறவற்றை கொடுத்து சவான் சிங் (10) என்ற சிறுவன் உதவியுள்ளார்.

    இதனால் பெரோஸ்பூரைச் சேர்ந்த ஷர்வன் சிங்கை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், இந்த சிறுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் (Golden Arrow Division of the Indian Army) அறிவித்துள்ளது.

    • ஆம் ஆத்மியின் பெண் எம்.எல்.ஏ. அன்மோல் ககன்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
    • கரார் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

    ஜெய்ப்பூர்:

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. அன்மோல் ககன்மான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

    கரார் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் குல்தார் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

    பாடகராக இருந்து அரசியலுக்கு வந்த அன்மோல் 2022ல் கரார் தொகுதியில் வென்று எம்.எல்.ஏ. ஆனார். சுற்றுலா மற்றும் கலாசாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்தார்.

    • 24 மணிநேரத்திற்குள் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • யார் மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை

    பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    24 மணிநேரத்திற்குள் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பொற்கோவிலுக்குள் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் இருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்ததை அடுத்து கோவிலுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரியவந்ததும் யார் மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • The Turbaned Tornado என்ற பெயரில் குஷ்வந்த் சிங் எழுதியுள்ளார்.
    • பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, பௌஜா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்று அறியப்படுபவர் பௌஜா சிங் (Fauja Singh). இவருக்கு வயது 114.

    இவர் திங்கள்கிழமை, பஞ்சாபில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் வாகனம் மோதி உயிரிழந்தார்.

    விபத்தில் படுகாயமடைந்த அவர், ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவை எழுத்தாளர் குஷ்வந்த் சிங் உறுதிப்படுத்தியுள்ளார் .

    பௌஜா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை "தி டர்பண்ட் டோர்னாடோ" (The Turbaned Tornado) என்ற பெயரில் குஷ்வந்த் சிங் எழுதியுள்ளார்.

    பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, பௌஜா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • தசுயா நோக்கி 40 பயணிகளுடன் மினி பஸ் சென்றுகொண்டிருந்தது.
    • உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நேற்று (திங்கள்கிழமை) மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.  

    ஹஜிப்பூர் நகரில் இருந்து தசுயா நோக்கி 40 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் தசுயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பஞ்சாப் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் என ஹோஷியார்பூர் துணை ஆணையர் ஆஷிகா ஜெயின் தெரிவித்துள்ளார்.  உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் அனுப்பும்
    • எல்லாவற்றிற்கும் எல்லை உள்ளது என்று தெரிவித்தார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்ததை அடுத்து, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கையில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் திறனை வெளிப்படுத்த நாடு தழுவிய பிரச்சாரத்தை பாஜக நாடு தழுவிய பிரசராத்தை அறிவித்து நடத்தி வருகிறது.

    இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாஜக ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் அனுப்பும் என்று செய்திகள் வந்தன.

     இந்நிலையில் பஞ்சாபின் லூதியானா நகரில் பா.ஜ.க.வினர்,தேர்தல் பிரசாரத்தின்போது ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்துவது பற்றி செய்தியாளர் கேள்விக்கு அம்மாநில முதல்வர் பகவந்த் மான் பதிலளித்து பேசினார்.

    அப்போது, இந்த பிரசாரம் பற்றி ஒவ்வொருவரும் கிண்டல் செய்து வருகின்றனர். நீங்கள் இதனை (சிந்தூர்) எடுத்து கொண்டு சென்று உங்கள் மனைவியிடம் கொடுத்து, மோடியின் பெயரால் எடுத்து கொள் என கூறுவீர்களா? என்று அந்த நிருபரிடம் கேட்ட பகவந்த் மான், இது என்ன ஒரு நாடு-ஒரு கணவன் திட்டமா? எல்லாவற்றிற்கும் எல்லை உள்ளது" என்று தெரிவித்தார். 

    • பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் நடமாட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தானில் உளவு அமைப்புக்கு பகிர்ந்தாக பஞ்சாபை சேர்ந்த ககன்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் அவர் தகவல்களை பகிர்ந்து கொண்ட மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட நபர் ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி பணம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர். 

    • வெடிவிபத்தில் தொழிற்சாலை முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் உள்ள சிங்கேவாலா கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பெரும் விபத்தில் 5 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 29 பேர் காயமடைந்தனர்.

    அதிகாலை 1:00 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிற்சாலை முற்றிலுமாக இடிந்து விழுந்தது.  தீப்பற்றி பற்றி எரிந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததால் தான் உயிர் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே காயமடைந்தவர்கள் காயமடைந்தவர்கள் பதிண்டா மற்றும் முக்த்சரில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    • டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்கியது. சண்டிகரில் நடந்த குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பஞ்சாப் முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஆர்சிபி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆர்சிபி சார்பில் சூயஷ் சர்மா, ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ×