என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

குவாலிபையர் 1: சரணடைந்த பஞ்சாப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி
- டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சண்டிகர்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்கியது. சண்டிகரில் நடந்த குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பஞ்சாப் முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஆர்சிபி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆர்சிபி சார்பில் சூயஷ் சர்மா, ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஆர்சிபி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.






