என் மலர்
நீங்கள் தேடியது "குவாலிபையர் 1"
- டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சண்டிகர்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்கியது. சண்டிகரில் நடந்த குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பஞ்சாப் முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே ஆர்சிபி வீரர்கள் அசத்தலாகப் பந்து வீசினர். இதனால் பஞ்சாப் வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவரில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆர்சிபி சார்பில் சூயஷ் சர்மா, ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 12 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மயங்க் அகர்வால் 19 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பிலிப் சால்ட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், ஆர்சிபி அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிலிப் சால்ட் 56 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஆர்சிபி அணி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து பெங்களூரு அணி அசத்தியுள்ளது.
- பஞ்சாப் அணியுடன் ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் மோதுகிறது.
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது.
இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தொடரின் தனது அனைத்து AWAY GAMES போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை பெங்களூரு அணி படைத்தது.
பெங்களூரு அணி மொத்தமுள்ள 14 போட்டிகளில், அதன் 7 AWAY போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தது.
- பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை அணிகள் தகுதி பெற்றன.
புதுடெல்லி:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் வரும் வியாழக்கிழமை மோதுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் குஜராத், மும்பை அணிகள் மோதவுள்ளன.
இந்த குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது. குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
- கொல்கத்தா அணியில் பில் சால்ட், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்றோர் உள்ளனர்.
ஐபிஎல் 2024 சீசனின் லீக் ஆட்டங்கள் நேற்றோடு முடிவடைந்தன. இன்று ஓய்வு நாள். நாளையில் இருந்து பிளேஆஃப் சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. நாளை குவாலிபையர்-1 நடக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரந்திரே மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொல்கத்தா அணி 14 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்றுள்ளது. 3-ல் தோல்வியடைந்துள்ளது. 2 போட்டிகளில் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
இந்த அணியில் சுனில் நரைன் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்படுகிறார். இவருடைய நாளாக கருதப்படும் நாளில் சிறப்பாக பேட்டிங் செய்வார். ஆனால் இந்த சீசனில் ஓரவிற்கு எல்லா போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
13 போட்டிகளில் விளையாடி 461 ரன்கள் குவித்துள்ளார். இதில் 1 சதம், 3 அரைசதங்கள் அடங்கும். ஒட்டுமொத்தமாக 10-வது இடத்தில் உள்ளார். இவர் நாளைய போட்டியில் நிலைத்து நின்று விளையாடினால் சன்ரைசர்ஸ் ஐதாராபாத் அணிக்கு அது பாதகமாக முடியும். அதேபோல் மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட். இவர் 12 போட்டிகளில் 435 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியில் 12-வது இடத்தில் உள்ளார். அவர் நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார்.
இருவரும் களத்தில் நின்றுவிட்டால் பந்துகள் நாலாபுறமும் பறக்கும். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இந்த இருவரையும் எவ்வளவு விரைவாக வெளியேற்றுகிறதோ?, அது அவர்களுக்கு சாதகமாக முடியும்.
மேலும் கொல்கத்தா அணியில் ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ராமன்தீப் சிங், நிதிஷ் ராணா, அங்கிரிஷ் ரகுவன்ஷி உள்ளனர். இதனால் பேட்டிங்கிற்கு பஞ்சம் இருக்காது.
வேகப்பந்து வீச்சில் ஸ்டார்க், வைபவ் ஆரோரா, அந்த்ரே ரஸல், ஹர்ஷித் ராணா போன்றோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் சுனில் நரைன் உள்ளனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எந்தவிதத்திலும் சளைக்காமல் விளையாடும்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி என்றாலே டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் ஆகிய மூன்று பேர்தான் மிகப்பெரிய நம்பிக்கை. அவர்களுக்கு நிதிஷ் ரெட்டி, ஷபாஸ் அகமது, அப்துல் சமாத் ஆகியர் சப்போர்ட்டாக உள்ளனர்.
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் பவர்பிளே வரை நின்றுவிட்டால் கொல்கத்தா அணிக்கு சிரமம்தான்.

அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தியை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதே பொறுத்தே ரன்கள் அமையும்.
பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ், நடராஜன், புவனேஷ்வர் குமார், உனத்கட் போன்ற வேகபந்து வீச்சாளர்கள் உள்ளனர். சுழற்பந்து வீச்சில் மயங்க் மார்கண்டே, விஜயகாந்த் வியாஸ் காந்த் உள்ளனர். ஆனால் ஐதராபாத் அணி பந்து வீச்சில் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை.
பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் விளாசி பெரிய டார்கெட் நிர்ணயிக்கும்போது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.
நேற்று பஞ்சாப் அணிக்கெதிராக 200 ரன்ளுக்கு மேலான இலக்கை எட்டியுள்ளது. ஒருவேளை சேஸிங் இந்த அணிக்கு சவாலாக இருக்கும். எப்படி இருந்தாலும் பேட்டிங் இந்த அணிக்கு முழுப்பலமாக திகழ்கிறது.
இரு அணிகளும் சம பலத்துடன் விளங்குவதால் நாளைய போட்டி பரபரப்பாகவும், ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையிலும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.






