search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KKRvSRH"

    • 19-வது ஓவரில் ஸ்டார்க் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
    • கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணா 2 விக்கெட் வீழ்த்தி அணியைக்கு த்ரில் வெற்றியை தேடிக்கொடுத்தார்.

    ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ஆந்த்ரே ரஸல் 7 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 25 பந்தில் 64 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால் (21 பந்தில் 32 ரன்), அபிஷேக் ஷர்மா (19 பந்தில் 32 ரன்) தங்களது பங்களிப்பை கொடுத்தனர்.

    அடுத்து வந்த திரிபாதி 20 பந்தில் 20 ரன்களும், மார்கிராம் 13 பந்தில் 18 ரன்களும், அப்துல் சமாத் 11 பந்தில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    6-வது விக்கெட்டுக்கு ஹென்ரிச் கிளாசன் உடன் ஷபாஸ் அகமது ஜோடி சேர்ந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 19 பந்தில் 64 ரன்கள் தேவைப்பட்டது.

    18-வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். இந்த ஓவரில் கிளாசன் 2 சிக்ஸ், ஷபாஸ் ஒரு சிக்ஸ் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது.

    கடைசி 2 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் கிளாசன் 3 சிக்ஸ், ஷபாஸ் அகமது ஒரு சிக்ஸ் அடிக்க 26 ரன்கள் வழங்கினார் ஸ்டார்க். அத்துடன் கிளாசன் 25 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதனால் கடைசி ஓவரில் 13 ரன்களே தேவைப்பட்டது. ஹர்ஷித் ராணா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தை கிளாசன் சிக்சருக்கு தூக்கினார். இதனால் ஐந்து பந்தில் 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஹர்ஷித் ராணா 3-வது பந்தில் ஷபாஸ் அகமதுவையும் (5 பந்தில் 16 ரன்), 5-வது பந்தில் கிளாசனையும் (29 பந்தில் 63 ரன்) வீழ்த்தினார். இதனால் கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை டாட் பந்தாக வீச கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.

    ஹர்ஷித் ராணா கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ராணா 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ஆந்த்ரே ரஸல்- ரிங்கு சிங் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 32 பந்தில் 81 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசன் நேற்று தொடங்கிய நிலையில் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி கொல்கத்தா அணியின் பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். சுனில் நரைன் 2 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் ரன்ஏதும் எடுக்காமலும், நிதிஷ் ராணா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

    51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. ஐந்தாவது விக்கெட்டுக்கு பிலிப் சால்ட் உடன் ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். ராமன்தீப் சிங் 17 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் விளாசினார். இதனால் இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவிததது.

    சால்ட் அரைசதம் அடித்த நிலையில் 40 பந்தில் 3 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    7-வது விக்கெட்டுக்கு ரிங்கி சிங் உடன் ஆந்த்ரே ரஸல் ஜோடி சேர்ந்தார். அந்த்ரே ரஸல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் அடித்த பந்து எல்லாம் சிக்சருக்கு பறந்தது. அவர் 20 பந்தில் 7 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

    இருவரின் அதிரடியால் கொல்கத்தா அணி 19 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆந்த்ரே ரஸல்- ரிங்கு சிங் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 32 பந்தில் 81 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    கடைசி ஓவரில் நடராஜன் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் டி. நடராஜன் 3 விக்கெட் வீழ்த்தினார். கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார். மயங்க் மார்கண்டே 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஐதராபாத் 228 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 9 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் வெளியேறினர்.

    அடுத்து இறங்கிய மார்க்ரம், அதிரடியில் மிரட்டினார். அவர் 26 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட அரை சதமடித்து அவுட்டானார்.

    3-வது விக்கெட்டுக்கு மார்க்ரம், புரூக் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.

    அபிஷேக் சர்மா 17 பந்தில் 32 ரன் எடுத்தார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 55 பந்துகளில் 100 ரன்களுடனும், கிளாசன் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்தது. இதையடுத்து, 229 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

    டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார். #IPL2018
    ஐபிஎல் 2018 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவாலிபையர் 2-க்கு முன்னேறியுள்ளது. நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத்துடன் பலப்பரீட்சை நடத்துக்கிறது.

    இந்நிலையில் டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது என ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பேட்ஸ்மேன்கள் தற்போதைய நாட்களில் பந்து வீச்சுக்கு ஏதுவாக எப்படி பீல்டிங் அமைத்துள்ளார்கள் என்பதை கவனிக்க முடியும். ஆகவே, டெத் ஓவரில் பீல்டிங் செட்டிங் மிகவும் முக்கியமானது.



    நாளைய போட்டியின்போது எங்களது பந்து வீச்சாளர்கள் இரண்டு மாறுபட்ட லைனில் பந்து வீசும் அளவிற்கு பீல்டிங் செட்டிங் செய்ய முயற்சி செய்வோம். இது பேட்ஸ்மேனை யோசனை வைக்கச் செய்யும்’’ என்றார்.
    ×