search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆந்த்ரே ரஸல் வாணவேடிக்கை: ஐதராபாத்துக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கே.கே.ஆர்.

    • ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ஆந்த்ரே ரஸல்- ரிங்கு சிங் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 32 பந்தில் 81 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசன் நேற்று தொடங்கிய நிலையில் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி கொல்கத்தா அணியின் பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். சுனில் நரைன் 2 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் ரன்ஏதும் எடுக்காமலும், நிதிஷ் ராணா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

    51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. ஐந்தாவது விக்கெட்டுக்கு பிலிப் சால்ட் உடன் ராமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். ராமன்தீப் சிங் 17 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் விளாசினார். இதனால் இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவிததது.

    சால்ட் அரைசதம் அடித்த நிலையில் 40 பந்தில் 3 சிக்ஸ், 3 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    7-வது விக்கெட்டுக்கு ரிங்கி சிங் உடன் ஆந்த்ரே ரஸல் ஜோடி சேர்ந்தார். அந்த்ரே ரஸல் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் அடித்த பந்து எல்லாம் சிக்சருக்கு பறந்தது. அவர் 20 பந்தில் 7 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

    இருவரின் அதிரடியால் கொல்கத்தா அணி 19 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் ரிங்கு சிங் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆந்த்ரே ரஸல்- ரிங்கு சிங் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 32 பந்தில் 81 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    கடைசி ஓவரில் நடராஜன் 8 ரன்கள் விட்டுக்கொடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது. ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்ஸ் உடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் டி. நடராஜன் 3 விக்கெட் வீழ்த்தினார். கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார். மயங்க் மார்கண்டே 2 விக்கெட் வீழ்த்தினார்.

    Next Story
    ×