என் மலர்

  நீங்கள் தேடியது "girl kidnapped"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு போஸ்டரில் இருந்த தொலைபேசியின் வாயிலாக சிறுமி தனது குடும்பத்தை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
  • குழந்தை இல்லாததால் சிறுமிய கடத்தியதாக, கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.

  மும்பை:

  மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு போஸ்டரின் உதவியால் தனது குடும்பத்துடன் இணைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மும்பை நகரில் அந்தேரி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி பூஜா. தனது 7 வயதில், 2013ம் ஆண்டு ஜனவரி 22ந்தேதி காலையில் சகோதரருடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவரை அணுகிய ஹென்றி ஜோசப் டிசோசா என்பவர் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கடத்தி சென்று விட்டார். இதன்பின்பு, உடனடியாக கர்நாடகாவுக்கு தப்பி சென்றுள்ளார். பூஜாவை விடுதி ஒன்றுக்கு அனுப்பியுள்ளார். சிறுமியின் பெயரை ஆன்னி டிசோசா என மாற்றியுள்ளார்.

  இதன்பின்னர், ஹென்றிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மீண்டும் மும்பைக்கு திரும்பி வந்துள்ளனர். ஹென்றியும், அவரது மனைவியும், பூஜாவை அனைத்து வீட்டு வேலைகளையும் வாங்கி உள்ளனர். சரிவர சிறுமியை கவனிக்காமல் விட்டு விட்டனர். 16 வயது எட்டிய பூஜாவுக்கும் தனது குடும்ப உறுப்பினர்களை பற்றிய நினைவே இல்லாமல் போயுள்ளது. இவ்வளவுக்கும் சில நூறு மீட்டர் தொலைவிலேயே சிறுமியின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். ஆனால், ஒரு நாள் குடிபோதையில் ஹென்றி, நீ எனது மகள் இல்லை என பூஜாவிடம் கூறியுள்ளார். இதனால், வருத்தமுற்ற பூஜா, தனது தோழி உதவியுடன் கடந்த காலம் பற்றி அறிய முயற்சித்து உள்ளார்.

  இணையதளத்தில், பூஜா மாயம் தொடர்பான தேடுதலில் ஈடுபட்டு உள்ளார். இதில் இறுதியாக, 2013ம் ஆண்டு காணாமல் போன பூஜா தொடர்பான போஸ்டர் ஒன்று கிடைத்து உள்ளது. அதில் 5 தொடர்பு எண்கள் இருந்துள்ளன. ஆனால், 4 எண்கள் வேலை செய்யவில்லை. எனினும், கடைசியாக இருந்த எண்ணை முயற்சித்ததில் அது, பூஜாவின் அண்டை வீட்டுக்காரரான ரபீக்கின் தொலைபேசி எண் என தெரிந்தது. அவரை தொடர்பு கொண்டு பேசி தன்னை பற்றி கூறியுள்ளார். இதனால், ஆச்சரியமடைந்த ரபீக் பின்பு வீடியோ காலில் வந்து, பூஜாவை அடையாளம் கண்டுள்ளார். பின்னர், பூஜாவின் தாயாரையும் பேச வைத்து உள்ளார்.

  பூஜாவின் தாயாரும் தனது மகளை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார். இருவரும் போனிலேயே அழுதுள்ளனர். உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முயற்சியுடன் பூஜா மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். இந்த காலகட்டத்தில் பூஜாவின் தந்தை உயிரிழந்து விட்டார்.

  இதுபற்றி மூத்த காவல் அதிகாரி மிலிந்த் குர்தர் கூறும்போது, 'ஹென்றி கைது செய்யப்பட்டு உள்ளார். தனக்கும், மனைவிக்கும் குழந்தை இல்லாததற்காக பூஜாவை கடத்தியதாக அவர் கூறியுள்ளார். ஹென்றியின் மனைவியும் வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்' என்றார்.

  9 ஆண்டுகளுக்கு முன் தனது தாயாருடனும், சகோதரருடனும் பள்ளிக்கு சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு பிரிந்து சென்ற பூஜா, போஸ்டர் ஒன்றின் உதவியுடன் மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்தது அவருக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மிஸ்டு கால் மூலமாக வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
  • 2 பேரும் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர்.

  கோவை:

  கோவை கருமத்தம்பட்டி யை சேர்ந்த 16 வயது சிறுமி. இவருக்கு மிஸ்டு கால் மூலமாக நெல்லையை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

  கடந்த மாதம் 23-ந் தேதி கோவைக்கு வந்த ஈஸ்வரன் திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவருடன் திருச்செந்தூரில் வசித்து வந்தார். சிறுமி மாயமானது குறித்து அவரது தந்தை கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த ஈஸ்வரன் சிறுமியை கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். சிறுமியிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியிடம் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.

  அப்போது மைனர் பெண் என்று தெரிந்து அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்ற ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பண்ருட்டி அருகே கார் மெக்கானிக் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

  கடலூர்:

  பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டை சேர்ந்தவர் சுரேஷ் (22), கார் மெக்கானிக். இவர் அதே ஊரை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவியை காதலித்து வந்தார். மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் அவரை கடத்தி சென்றார்.

  இதுகுறித்து மாணவியின் தாயார் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

  இந்த நிலையில் சென்னை யில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் சென்னை சென்று மாணவியை மீட்டனர். இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.மகளிர் ேபாலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

  மதுரை:

  மதுரை அண்ணாநகர் அருகேயுள்ள கரும்பாலையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 22). இவர் சக்கிமங்கலம் அஞ்சுகம் நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார்.

  இதையடுத்து அவர் சிறுமியின் பெற்றோரிடம் பெண் கேட்டு வந்தார். ஆனாலும் அவர்கள் முத்துப்பாண்டிக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

  இந்த நிலையில் முத்துப்பாண்டி சம்பவத்தன்று நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு சிறுமியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் இருந்தனர்.

  அப்போது முத்துப்பாண்டி சிறுமியிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். என்னுடன் வா’ என்று அழைத்து உள்ளார். அதற்கு சிறுமிக்கு விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

  இதையடுத்து முத்துப்பாண்டி வீட்டில் இருந்த தாய்-சகோதரியை அடித்து உதைத்து சிறுமியை கடத்திச் சென்று விட்டாராம்.

  இது தொடர்பாக சிறுமியின் தாய் ஊமச்சிக்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி மற்றும் சிறுமியை தேடி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏரியூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் அம்மா வீட்டிற்கு சென்ற 32 வயது பெண்ணை 20 வயது வாலிபர் கடத்தி சென்றார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தருமபுரி:

  தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்துள்ள அஜ்ஜன அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி காந்தாமணி (வயது32). இவர்களுக்கு 5 வயது குழந்தை உள்ளது.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு காந்தாமணி அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 17-ந் தேதி காந்தாமணி வீட்டில் இருந்து தாயிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் ஐய்யண்ணன் உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

  இது குறித்து ஐய்யண்ணன் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் பூவரசன் (வயது20) என்பவர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று ஏரியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீழ்பென்னாத்தூர் அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ChildKidnapped
  கீழ்பென்னாத்தூர்:

  திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராஜாதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் விவசாயி. இவரது 3 வயது மகள் இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது 3 வடமாநில வாலிபர்கள் அங்கு வந்தனர்.

  அதில் ஒருவன் நைசாக குழந்தையை தூக்கினார். 3 பேரும் குழந்தையுடன் நடக்க தொடங்கினர். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருக்கிட்டு கூச்சலிட்டனர். சுதாரித்து கொண்ட வாலிபர்கள் 3 பேரும் தப்பி ஓடினர்.

  பொதுமக்கள் விரட்டி சென்று குழந்தையுடன் தப்பி ஓடிய வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

  பிடிபட்ட வாலிபரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அந்த வாலிபரை கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

  இதுபற்றி கீழ்பென்னாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வடமாநில வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் இந்தியில் பேசியதால் அவர் பற்றிய விவரங்களை சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

  தமிழகத்தில் குழந்தை கடத்தல் சந்தேகத்தில் வடமாநில வாலிபர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டனர்.

  போளூர் தம்புகொட்டான் பாறையில் கடந்த மே மாதம் கோவிலுக்கு வந்த சென்னையை சேர்ந்தவர்களை பொதுமக்கள் தாக்கினர். இதில் ருக்குமணி என்பவர் பலியானார். தாக்குதலில் காயமடைநத கஜேந்திரன் என்பவர் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று இறந்தார்.

  இந்த நிலையில் வடமாநில வாலிபர்கள் குழந்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   #ChildKidnapped  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்காததால் இளம்பெண்ணை வாலிபர் கடத்தி சென்று விட்டதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  திருவாரூர்:

  பேரளம் அருகே உள்ள மதுரவாஞ்சேரியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் காயத்ரி (வயது 16). இவரை திருமணம் செய்ய அதே பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவர் மகன் விக்னேஷ் விரும்பி உள்ளார். அவர் நேற்று மாலை தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று பெண் கேட்டு உள்ளார். இந்த திருமணத்துக்கு காயத்ரி வீட்டினர் சம்மதிக்கவில்லை.

  இதைத்தொடர்ந்து நேற்று இரவு காயத்ரி திடீரென மாயமாகி விட்டார். அவரை விக்னேஷ் கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ராமச்சந்திரன் பேரளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான காயத்ரியை தேடி வருகின்றனர்.

  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையில் வேலை பார்த்த சிறுமி கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சிறுமியை தேடி வருகிறார்கள்.

  சேலம்:

  சேலம், திருவாக வுண்டனூர் பைபாஸ் சாலையை சேர்ந்த 15 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். 

  இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வசந்தகுமார் என்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அந்த பெண்ணை வசந்தகுமார் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

  ×