என் மலர்
நீங்கள் தேடியது "arrested in POCSO"
- 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை வயிற்று வலியால் துடித்தார்.
- இதையடுத்து அவரை பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள், சிறுமியை பரிசோதித்து பார்த்தபோது, சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த உறவின ரான வேன் டிரைவர் குருநாதன் (வயது 49) என்பவர் ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும், கர்ப்பத்துக்கு அவர் தான் காரணம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதையடுத்து பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குருநாதனை நேற்று கைது செய்தனர்.
- பண்ருட்டி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயதுசிறுமி இவர்அதேபகுதியி ல்உள்ளதொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22-ந் தேதி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் தனது வீட்டு பிரிட்ஜில் உள்ள மீனை எடுத்து வரச்சொல்லி சிறுமியிடம் கூறி உள்ளார். வீட்டுக்குள் மீன் எடுக்கச் சென்ற சிறுமியை 17 வயது சிறுவன், பின் தொடர்ந்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார் உடனே சிறுமி சத்தம் போட்டார்.இந்த சத்தம் கேட்டு சிறுமியின் தாய் அங்கு ஓடி வந்தார். அவரை பார்த்ததும் சிறுவன் தப்பி ஒடி விட்டான்.
இது குறித்து பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவனை கைது செய்தார். பின்னர் சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
- சில தினங்களுக்கு முன்பு இருவரும் காணாமல் போனார்கள்.
- கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம் :
மதுரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன்(வயது 24). இவர் பல்லடம் பனப்பாளையத்தில் தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடன் பணியாற்றும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் காணாமல் போனார்கள்.
இந்த நிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், இருவரும் மதுரையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீசார் இருவரையும் விசாரணைக்காக பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
விசாரணையின் போது சிறுமியை கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமியை திருமணம் செய்ததால் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் மொடக்குறிச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் நட்பாக பழகினார்.
இந்த பழக்கம் நாள டைவில் காதலாக மாறியது. இதன்பேரில் சிறுமியிடம் ஸ்ரீதர் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரிக்க அவர் நடந்ததை தெரிவித்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
- 8 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
- சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
ஊட்டி,
ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் அஜித்குமார்(21) என்ற வாலிபர், சிறுமியிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்தார்.
சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அருகே உள்ள கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து விட்டு, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் சிறுமிக்கு, அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டலும் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சியான சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்றார். சிறுமியிடம் அவர் தாயார் விசாரித்தார்.
அப்போது சிறுமி தனக்கு நடந்தசம்பவங்களை பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர்கள் ஊட்டி புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் அஜித்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி சிறுமியை வாலிபர் திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
தற்போது சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் வயதை டாக்டர்கள் ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார்.
- பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
காரைக்கால், நவ.16-
காரைக்கால் கோட்டுச்சேரி அருகே உள்ள இராயன்பாளையத்தில், மத்திய அரசின் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் பலர் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். பள்ளி காவலாளியாக, நாகை மாவட்டம் தரங்கம்பாடியைச்சேர்ந்த முகம்மது அலி(வயது54) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, பள்ளி விடுதியில் இருந்த 8-ம் வகுப்பு மாணவன்(வயது12) ஒருவரை, தனியாக அழைத்துசென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததார். இது குறித்து, மாணவன் தன் பெற்றோரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், முகம்மது அலி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்;
- சிறுமியை கடத்தி தாய் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காடையாம்பட்டி:
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்; இத்திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
பழக்கம்
இந்த நிலையில் சேலம் அருேக சிறுமியை கடத்தி தாய் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 47). இவருடைய உறவினர் ஒருவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா டேனீஷ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த உறவினர் வீட்டுக்கு லட்சுமியின் மகன் ரமேஷ்குமார் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரமேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே ரமேஷ்குமாரின் தாய் லட்சுமி, தனது மகனுக்கு பல்வேறு இடங்களில் வரன் பார்த்து வந்தார். ஆனால் பெண் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மகனுக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க லட்சுமி முடிவு செய்தார்.
சிறுமியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்பதை அறிந்த அவர், நைசாக பேசி சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டினார்.
புகார்
கடந்த 22-ந்தேதி லட்சுமி, டேனீஷ்பேட்டைக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பெற்றோருக்கு தெரியாமல் நைசாக சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதை பார்த்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார். ரமேஷ்குமாருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே மகளை பல்வேறு இடங்களில் தேடியும் பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தபோதும், மகள் குறித்து எதுவும் தெரியவில்லை. இதனால் மகள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியாததால் கவலை அடைந்த பெற்றோர் இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பத்திரமாக மீட்பு
அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை லட்சுமி கடத்தி சென்றிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதமாக எடுத்தனர். பொம்மிடிக்கு சென்று சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார், லட்சுமி மீது குழந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையில் அவரை அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
கோவை,
பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.
இவரது உறவினர் வீடு கோவை சூலூர் செஞ்சேரிபுதூரில் உள்ளது. இதனால் அந்த சிறுமி அடிக்கடி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கார்பென்டர் நவீன்குமார் (19) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நட்பாக பழகி வந்தனர். அது நாளடையில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
அப்போது நவீன்குமார் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து இருவரம் வீட்டை விட்டு வெளியேறி செஞ்சேரிபுதூர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் நவீன்குமார் சிறுமியை அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு சென்றார். அங்கு தனது பெற்றோரிடம் சிறுமி மேஜர் என கூறியுள்ளார். பின்னர் சிறுமியை பொள்ளாச்சி அழைத்து சென்று அங்கு குடும்பம் நடத்தினார்.
அப்போது பல முறை சிறுமியை நவீன்குமார் பலாத்காரம் செய்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் இருவரும் பிரிந்தனர். சிறுமி தனது தாய் வீட்டுக்கு வந்தார்.
இதனால் சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளிக்க சிறுமியிடம் கூறினார். இதையடுத்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நவின்குமாரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- மாணவி உள்பட 2 பேரையும் மடக்கி பிடித்தனர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை சேர்ந்தவர் விஜி (வயது 20). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த மாணவியை அவர் தனது நண்பருடைய உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கடத்தி செல்வதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது பெற்றோர் மாணவி உள்பட 2 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.