வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
Published on

சேலம்:

சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று முன்தினம் காலை வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள், சிறுமியை பரிசோதித்து பார்த்தபோது, சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த உறவின ரான வேன் டிரைவர் குருநாதன் (வயது 49) என்பவர் ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும், கர்ப்பத்துக்கு அவர் தான் காரணம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து பெற்றோர், சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குருநாதனை நேற்று கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com