சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது

12 வயது சிறுமிக்கு பூங்காவனம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. பயந்த போன சிறுமி, வீட்டிற்கு ஓடி வந்து தாயிடம் அழுது கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
கைதான பூங்காவனம்.
கைதான பூங்காவனம்.
Published on

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் (வயது 50), கூலி தொழிலாளி. இவர் 12 வயது சிறுமிக்கு பூங்காவனம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இதனால் பயந்த போன சிறுமி, வீட்டிற்கு ஓடி வந்து தாயிடம் அழுது கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி யடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா (பொறுப்பு), எஸ்.ஐ சாரதா ஆகியோர் பூங்காவனத்தின் மீது போக்சோ வழக்கு பதிந்து, தலைமறைவான அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பூங்காவனம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com