என் மலர்
அரியானா
- பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ராம் ரஹிமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- குர்மீத் ராம் ரஹிமுக்கு 40 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அடிக்கடி பரோலில் குர்மீத் ராம் ரஹீம் விடுக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் குர்மீத் ராம் ரஹீமூக்கு அரியானா அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியான சாமியார் குர்மீத் ராம் ரஹிமுக்கு 40 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் அவருக்கு இது 3வது பரோல் ஆகும். தண்டனை பெற்ற 2020ம் ஆண்டு முதல் அவர் 14வது முறையாக பரோல் விடுப்பு (344 நாட்கள்) பெற்றுள்ளார்.
- தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார்.
- உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.
அரியானாவில் 30 வயது டெலிவரி ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
டெலிவரி ஊழியர் விகல் சிங், அரியானா மாநிலம் பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கடையில் டெலிவரி பாய் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், அவர் தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார். சக ஊழியர்கள் உடனடியாக அவரை தூக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதல் பார்வையில், அவர் மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த விகல் தனி ஆளாக வேலை செய்து, மனைவி, 8 மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களை காப்பாற்றி வந்தார்.
ஊர் மக்களின் போராட்டத்தை அடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்குவதாக நிறுவனம் அறிவித்தது. இது தவிர, இறுதிச் சடங்குகளுக்காக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
- ஹரியானாவில் நேற்று காலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.
- இன்று இரவு 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அரியானா மாநிலத்தில் இன்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ரிக்டர் அளவில் 3.7ஆக பதிவானது. அரியானாவில் இரண்டு நாட்களில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. அரியானாவின் ரோஹத் மற்றும் பகதுர்கார்க் மாவட்டங்களிலும் உணரப்பட்டுள்ளது.
நேற்று காலை 4.4 ரிக்டர் அளவில் ஜாஜ்ஜார் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லி- என்சிஆர் பிராந்தியத்தில் உணரப்பட்டது.
- மாநில அளவிலான வீராங்கனையான ராதிகா யாதவ் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
- இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு அடிமையானதால் தந்தை கோபத்தின் உச்சியில் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
ஹரியானாவில் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை. 25 வயதான இவர் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றுள்ளார. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிகிறது.
அவரது தந்தை பலமுறை கண்டித்த போதிலும், ராதிகா ரீல்ஸ் அடிமையில் இருந்து மீளவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர் தனது மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஐந்து முறை சுட்டதில் மூன்று குண்டுகள் பாய்ந்து ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து, ராதிகாவின் தந்தை பயன்படுத்திய துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன், அவரையும் கைது செய்துள்ளனர்.
- 35 வயது பெண் ஒருவர் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
- இருநாளுக்குப் பின் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார்.
சண்டிகர்:
அரியானாவின் பானிபட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த 24-ம் தேதி தனது கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இரு நாளுக்குப் பிறகும் அந்தப் பெண் வீடு திரும்பாததால் 26-ம் தேதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கால் துண்டான நிலையில் சோனிபட் அருகே உள்ள மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையில் அப்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்த விவரம் வருமாறு:
வீட்டில் இருந்து வெளியேறியதும் அந்தப் பெண் பானிபட் அருகே உள்ள ரெயில் நிலையம் ஒன்றில் சோகமாக அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரது கணவர் அனுப்பியதாக கூறி அறிமுகமானார்.
அதன்பின், ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் ஒன்றின் காலி பெட்டியில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மேலும் 2 பேர் அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் விடாத அவர்கள், அவரை சோனிபட்டுக்கு கடத்திச் சென்றனர். அங்கே ரெயில் தண்டவாளத்தில் வீசினர். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் பெண்ணின் கால் சிக்கி துண்டானது என தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பானிபட் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
அரியானாவில் நடந்த இத்தகைய கொடூரமான செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அண்ணியின் தங்கையை திருமணம் செய்ய வாலிபருக்கு விருப்பம்.
- குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததால் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
அரியானாவில் அண்ணியின் தங்கையை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்ததால், சகோதரி இருவரையும் வாலிபர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் வசித்து வருபவர்கள் ஷீனு (25), ரீது (23). இருவரும் சகோதரிகள். ஷீனுவின் கொழுந்தன் (brother-in-law) சுனில். சுனிலுக்கு ரீதுவை திருமணம் செய்து கொள்ள விருப்பம். தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால் சுனில் கோபம் அடைந்து ஷீனு மற்றும் ரீதுவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ரெயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வரும் வழியில் இருவரையும் துப்பாக்கியல் சுட்டுள்ளார். இருவரும் படுகாயம் அடைந்து கீழே சரிந்தனர்.
இதனைத் தொடர்ந்து சுனில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள் ரோஹத்தில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தப்பி ஓடிய சுனிலை போலீசார் தேடிவருகின்றனர்.
- திருமணம் நடந்த சில நாட்களிலே அருண் குடும்பத்தார் தனுவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- மீண்டும் பணம், நகை கேட்டு தனுவை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர்.
அரியானாவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகளை கொன்று வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்தது தொடர்பாக கணவர், மாமியார், மாமனார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2023-ம் ஆண்டு அருண் என்பவர் தனுவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் நடந்த சில நாட்களிலே அருண் குடும்பத்தார் தனுவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த ஓராண்டாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த தனு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கணவருடன் வாழ வந்துள்ளார். இருப்பினும் அருண் குடும்பத்தாரிடம் இருந்த பேராசை குறையவில்லை. மீண்டும் பணம், நகை கேட்டு தனுவை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர்.
இதனிடையே, தனுவை அவரது பெற்றோர் மற்றும் சகோதரியிடம் பேச கணவன் வீட்டார் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஏப்ரல் 23-ந்தே தனு வீட்டை விட்டு ஓடிவிட்டதாக மாமியார் தனு குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, தனு குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக துணை காவல் ஆணையரை சந்தித்து தனு குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர்.
இதன்பின்னே, உண்மை வெளிவந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் 24 வயதான தனுவை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து கொன்று வீட்டின் அருகே பொதுப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் குழியில் புதைத்துள்ளனர். இதுதொடர்பாக தனுவின் கணவர், மாமனார், மாமியார், நெருங்கிய உறவினர் ஒருவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழியை தோண்டி தனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- ஷீத்தல் நீரில் மூழ்கியதாக சுனில் நாடகமாடியுள்ளார்.
- திருமண ப்ரோபோசலை ஷீத்தல் நிராகரித்தது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அரியானாவில் நாட்டுப்புற ஹரியான்வி இசைக்கலைஞரும் மாடலின் பிரபலமுமான ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலன் சுனில் கைது செய்யப்பட்டார்.
நேற்று (ஜூன் 16, 2025) சோனிபட் அருகே கால்வாயில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இருந்த உடலில் பல கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.
முன்னதாக, தனது கார் கால்வாயில் விழுந்ததாகவும், ஷீத்தல் நீரில் மூழ்கியதாகவும் சுனில் நாடகமாடியுள்ளார். ஆனால், விசாரணையில் இந்த நாடகம் அம்பலமானது. இறுதியில் சுனில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சுனிலுடன் காரில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஷீத்தலை சுனில் அடித்து, கத்தியால் குத்தி, பின்னர் காரை ஷீத்தலின் உடலுடன் கால்வாயில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சுனில் திருமணமானவர் என்பதால், அவரது திருமண ப்ரோபோசலை ஷீத்தல் நிராகரித்தது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது.
- அவரது சகோதரி நேஹா கடத்தல் புகார் அளித்தார்.
அரியானாவின் சோனிபட் அருகே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நாட்டுப்புற ஹரியான்வி இசைக்கலைஞரும் மாடலுமான இருந்து வந்த ஷீத்தல் என்ற இளம் பெண் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14 அன்று படப்பிடிப்புக்காக அஹார் கிராமத்திற்குச் சென்ற ஷீத்தல் வீடு திரும்பாததால், அவரது சகோதரி நேஹா கடத்தல் புகார் அளித்தார்.
போலீசார் மேற்கொண்ட தேடுதலில், காண்டா கிராமத்திற்கு அருகிலுள்ள கால்வாயில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலையின் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
- ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர் மவுனம் காத்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
- கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்டார்.
இந்திய ராணுவம் ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டபோது, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட பெண் இஸ்டா பிரபலத்தை கொல்கத்தா போலீசார், அரியானாவின் குருகிராமில் கைது செய்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர்கள் மவுனம் காத்தனர் என ஷர்மிஷ்தா பனோலி என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டியிருந்தார்.
இந்த வீடியோவை பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பனோலியை டிரோல் செய்ததுடன், மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டனர். வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, இன்ஸ்டாபக்கத்தில் இருநது நீக்கினார். வீடியோ வெளியிட்டதற்கான மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
புனே சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். இவருக்கு எதிராக கொல்கத்தாவில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஷர்மிஷ்தா பனோலிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
இதனால் தனது குடும்பத்துடன் தலைமறைவானார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்றிரவு குர்கிராமில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர்.
கடன் சுமையால் விஷம் குடித்து ஒரு குடும்பமே தற்கொலை.. காருக்குள் கிடந்த 7 உடல்கள் - பகீர் சம்பவம் அரியானாவில் ஒரு முழு குடும்பமும் நிதி காரணமாக தற்கொலை செய்து கொண்டது கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சகுலாவில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தங்கள் காரில் விஷம் குடித்தார் தற்கொலை செய்து கொண்டனர்.
பஞ்சகுலாவின் செக்டார் 27 இல் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் உடல்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர்.
இறந்தவர்கள் டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல் (42), அவரது பெற்றோர், மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என அடையாளம் காணப்பட்டனர்.
பஞ்சகுலாவில் நடைபெற்ற பாபகேஸ்வர் தாம் ஹனுமந்துனி கதா என்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்கள் அனைவரும் டேராடூனில் கலந்து கொண்டனர் கொண்டு வந்ததாக அறியப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்து டேராடூனுக்குத் திரும்பும் வழியில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பைக் கண்டுபிடித்தனர். இந்த தற்கொலைக்கு முதன்மையான காரணம் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
- கைகூப்புவதற்கு பதிலாக கணவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களுடன் போராடியிருக்க வேண்டும்
- பாஜக தலைவரும் அமைச்சருமான குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என்றார்.
பஹல்காம் தாக்குதல் அதைத்தொடர்ந்து இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பின்னணியில் அடுத்தடுத்து பாஜக தலைவர்கள் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து பாஜக எம்.பி. ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.
ஏப்ரல் 22 இல் ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றனர்.
தங்கள் கணவர்களை விட்டுவிடுமாறு கெஞ்சிய பிறகும் பயங்கரவாதிகள் கருணை காட்டவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.யான ராம்சந்தர் ஜாங்கிரா, கூட்டம் ஒன்றில் பேசுகையில், "அங்கே எங்கள் சகோதரிகள் இருந்தனர். அவர்களின் மாங்கல்யம் பறிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு வீராங்கனை போல எண்ணவில்லை, உற்சாகம் இல்லை, போராட்ட உணர்வு இல்லை.
அதனால்தான் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. பயங்கரவாதிகளிடம் மன்றாடுவதற்குப் பதிலாக, உங்கள் கணவர்களின் உயிரைக் காப்பாற்ற அவர்களுடன் போராடியிருக்க வேண்டும்" என்று ஜாங்கிரா தெரிவித்தார்.
பாஜக எம்.பி. ஜங்ராவின் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக தலைவர்கள் நமது வீரர்களையும் பெண்களையும் அவமதிப்பதைப் பழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சித்தனர்.
முன்னதாக மத்தியப் பிரதேச பாஜக தலைவரும் அமைச்சருமான குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என பேசியது குறிப்பிடத்தக்கது.






