என் மலர்
இந்தியா

17 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் - வீடியோ வெளியாகி பரபரப்பு
- பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
- அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான்.
அரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அங்குள்ள நூலகத்திற்கு தினமும் படிக்க செல்வது வழக்கம். சிறுமியை வாலிபர் ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அவரும் நூலகத்திற்கு சென்று வருவார்.
இந்நிலையில் வழக்கம் போல் சிறுமி நூலகத்திற்கு வந்தார். அவர் வருவதை அறிந்து அங்கு காத்திருந்த அந்த வாலிபர் சிறுமியை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான். மன ரீதியாக என்னை துன்புறுத்தினான் என்று கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் வாலிபர் துப்பாக்கியை விட்டுச்சென்றுள்ளார். அதனை போலீசார் கைப்பற்றினர்.
அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






