search icon
என் மலர்tooltip icon

    அரியானா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவில் இருந்து விலகுவதாக பிரிஜேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • பிரிஜேந்திர சிங், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிஸார் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

    ஹரியானா மாநிலம் ஹிஸார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.

    பாஜகவில் இருந்து விலகுவதாக பிரிஜேந்திர சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "அரசியல் காரணங்களுக்காக பாஜகவின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், தேசிய தலைவர் ஜே.பி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் எம்.பி பிரிஜேந்திர சிங், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    பிரிஜேந்திர சிங், வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிஸார் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வாந்தி எடுத்தனர்.
    • இந்தச் சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் செக்டர் 90 பகுதியில் லா ஃபாரஸ்டா கபே என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

    அங்கித் குமார் தனது குடும்பத்தினர், நண்பர்களுடன் நேற்று அங்கு சென்று உணவருந்தினார். அதன்பின், அவர்கள் ஐஸ் கலந்த மவுத் ஃப்ரெஷ்னரை சாப்பிட்டனர்.

    சிறிது நேரத்தில் அவர்களது நாக்குகளில் எரிச்சல் ஏற்பட்டது. சிலருக்கு வாயில் புண் ஏற்பட்டு ரத்தம் வடியத் துவங்கியது. ஒருவர் வாந்தியும் எடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மவுத் ஃப்ரெஷ்னரில் ஏதேனும் ரசாயனம் கலந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பா.ஜனதாவுக்கு 17 கவுன்சிலர்கள் இருந்த நிலையில், 3 ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அக்கட்சிக்கு மாறினர்.
    • 19 வாக்குகள் பெற்று சீனியர் துணை மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியுள்ளது.

    சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஆனால் ஆம்ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில் தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

    அதன்பின் மேயர் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது. அப்போது ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தப்பட்ட பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோங்கர் தோற்கடிக்கப்பட்டார். குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இன்று சீனியர் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 35 உறுப்பினர்களை கொண்ட மாநராட்சியில் பா.ஜனதா வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குர்ப்ரீத் காபி 16 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    பாஜனதாவுக்கு 17 கவுன்சிலர்கள் இருந்தனர். கடந்த 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பா.ஜனதாவுக்கு தாவினர். இதனால் தற்போது ஆம் ஆத்மிக்கு 10 உறுப்பினர்களும், காங்கிரஸ்க்கு ஏழு உறுப்பினர்களும் உள்ளன. ஷிரோமணி அகாளி தளத்திற்கு ஒரு கவுன்சிலர் இடம் உள்ளது.

    பா.ஜனதா துணை மேயர் பதவிக்கு சர்மாவை நிறுத்தியுள்ளது. காஙகிரஸ் நிர்மலா தேவியை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

    மேயர் தேர்தலின்போது ஆம் ஆத்மி வேட்பாளர் 20 வாக்குகள் பெற்றிருந்தார். பா.ஜனதா வேட்பாளர் 16 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் தேர்தல் அதிகாரி ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 8 வாக்குகள் செல்லாது என தெரிவித்ததுடன், பா.ஜனதா மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

    ஆனால், வீடியோவில் தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டை திருத்தியது தெரியவந்தது. இதனால் தேர்தல் அதிகாரி மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    • குழந்தை பருவம் முதலே தனது தந்தையுடன் ஜிம்முக்கு சென்று வந்த அர்ஷியாவுக்கு பளுதூக்குதலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
    • வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் சிறுமியின் திறமையை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சாதனைகள் படைக்க வயது முக்கியமல்ல என நிரூபித்துள்ளார் 8 வயது சிறுமி ஒருவர். அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி. குழந்தை பருவம் முதலே தனது தந்தையுடன் ஜிம்முக்கு சென்று வந்த அர்ஷியாவுக்கு பளுதூக்குதலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

    இதனால் அதிக எடை கொண்ட பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற அவர் சமீபத்தில் 60 கிலோ எடை தூக்கும் போட்டியில் வென்று ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளதாக இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் சிறுமியின் திறமையை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • 2017-ம் ஆண்டு இரண்டு பெண்களை கற்பழித்த வழக்கில் சிறைத்தண்டனை.
    • கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    கற்பழிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவர் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவருக்கு அடிக்கடி பரோல் அனுமதி வழங்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கடந்த 10 மாதங்களில் மட்டும் ஏழு முறை பரோலில் வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் 9 முறை வெளியில் வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மட்டும் 40 நாட்கள் பரோலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு பஞ்சாப்- அரியானா நீதிமன்றத்தில் வந்தபோது, குர்மீத் ராம் ரஹீம்-க்கு பரோல் வழங்கப்பட்டது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    அவர் மார்ச் 10-ந்தேதி சரண் அடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த முறை அவருக்கு பரோல் வழங்க அரசு முடிவு செய்யும் என்றால், அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் இந்த சலுகையை பெற்றுள்ளார். இதே குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் இந்த சலுகை பெற்றுள்ளார்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், எத்தனை பேர் இதே அடிப்படையில் பரோல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர். எத்தனை பேருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுளள்து.

    ராம் ரஹீம்-க்கு மூன்று முறை 91 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நம்பவர் மாதம் 21 நாட்கள், ஜூலை மாதம் 30 நாட்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 40 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் தலைவரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • நஃபே சிங்குடன் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் உயிரிழந்தார்.
    • காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி.

    அரியானாவில் இந்திய தேசிய லோக்தள தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான நஃபே சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

    பகதூர் என்ற இடத்தில் நஃபே சிங் காரில் சென்று கொண்டிருந்தபோது சூழ்ந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

    அப்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்து நஃபே சிங் மற்றும் கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் ஆகியோர் உயிரிழந்தனர்.

    மேலும், காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • காரைத் திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளேயே தூங்கினார்.
    • அவரிடம் இருந்து போதைப் பொருள்கள் மீட்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

    பரிதாபாத்:

    அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத்தில் வசிக்கும் ரவி என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது ஈகோ மாடல் காரை பார்க்கிங் செய்துவிட்டு தூங்கச் சென்றார்.

    இந்நிலையில், நேற்று காலை காரை சுத்தம் செய்வதற்காக வந்த அவர் காரின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். காருக்குள் ஒரு நபர் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டார்.

    இதுகுறித்து ரவி போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    விசாரணையில், அந்த நபர் காரைத் திருட வந்ததும், போதையில் காருக்குள் தூங்கியதும் தெரிய வந்தது.

    • ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
    • 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:

    மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

    இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.

    ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

    • யுவராஜ் சிங்கின் வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் திருடுபோய் உள்ளது.
    • பிப்ரவரி 11-ம் தேதி தனது வீட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி காவல்துறையில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ்சிங்கின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    யுவராஜ் சிங்கின் வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் திருடுபோய் உள்ளது. இதுபற்றி யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங், போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், வீட்டு வேலை செய்து வந்த லலிதா தேவி மற்றும் பீகாரைச் சேர்ந்த சமையல்காரர் சில்தார் பால் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிப்ரவரி 11-ம் தேதி தனது வீட்டில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி காவல்துறையில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவம் நடந்த சில தினங்களில் இப்போது யுவராஜ் சிங்கின் வீட்டில் கொள்ள சம்பவம் நடந்துள்ளது.

    • தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்த விவசாயிகள் முடிவு.
    • டெல்லிக்கு செல்ல விடாமல் அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

    விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர்.

    இதற்காக கடந்த 13-ந்தேதி (திங்கட்கிழமை) அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அரியானா மாநில அரசு விவசாயிகள் எல்லையை கடந்து செல்ல முடியாத வகையில் தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்து வருகிறது.

    பஞ்சாப்- அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்ட நடத்திய நிலையில் டிரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    ஒரு பக்கம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மறுபக்கம் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று மத்திய அமைச்சர்கள் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே இரண்டு முறை (பிப்ரவரி 8-ந்தேதி மற்றும் பிப்ரவரி 12-ந்தேதி) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில்தான் நேற்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை அரியானாவில் நடைபெற்றது. இரவு வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வருகிற 18-ந்தேதி (நாளைமறுநாள்) நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது
    • நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன.

    ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தன்னுடைய X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது நாடு ஒரு இருண்ட பாதையை நோக்கி நகர்வதை குறிக்கிறது. நவீன விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் இப்போது விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீச பயன்படுகின்றன. பாஜக அரசு விவசாயிகளை நாட்டின் எதிரிகள் போல கையாளுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக பேச தைரியம் இல்லாத தலைவர்கள் ட்ரோன்களை ஏவுகின்றனர்.

    இது போராடும் விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். ட்ரோன்களில் கேமிராக்களை பொருத்தி போராடுபவர்களை அடையாளம் கண்டு பழிவாங்குவது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல.

    அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் உயிர்நாடி. ட்ரோன்கள் அதை அடக்கக்கூடாது இந்த அடிப்படை உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும்.

    இது விவசாயிகளைப் பற்றியது மட்டுமல்ல. இது நம் அனைவரையும் பற்றியது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம். இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்த்தெழ செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்

    • விவசாயிகள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது.
    • டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்தொடர்ச்சியாக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி 13-ந்தேதி) புறப்பட்டனர்.

    விவசாயிகள் 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் டீசல் உடன் புறப்பட்டனர். இதனால் டெல்லி எல்லையில் கடந்த 2020-2021-ல் ஏற்படுத்தியது போன்று இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கருதி அரியானா அரசு விவசாயிகள் டிராக்டரில் செல்லாத வண்ணம் சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் போராட்டம் குறித்து அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:-

    கோரிக்கைகளை எழுப்புவதற்கும், டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களின் நோக்கத்தை பார்க்க வேண்டும். கடந்த வருடம் என்ன நடந்தது என்பதை நான் அனைவரும் பார்த்தோம். விவசாயிகள் பல்வேறு எல்லைகளை ஆக்கிரமித்து பிரச்சனையை ஏற்படுத்தினார்கள்.

    அவர்கள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது. டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும். விவாதம் ஜனநாயக முறையில் நடைபெற்று தீர்வு காணப்பட வேண்டும்.

    இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    ×